பக்கம்:அன்பின் உருவம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதப் பெதுங்கடல் 33 பொருள்களைப் பார்த்து அதனுலே மகிழ்ச்சியோ துக்கமோ வேறு சிந்தனேயோ எழும்படியாகச் செய்வதுதான் பெரும் பாலான மனிதர்களுக்கு இயல்பு. கண் பார்த்துக் கொண்டே இருக்கும்; மனம் எதையாவது சிந்திக்கும்; வாய் ஏதாவது பேசும், கை ஏதாவது செய்யும். சிந்தனேக்கும் பார்வைக்கும் பேசுகிற பேச்சுக்கும் சம்பந்தமே இருப்ப

جه یحیی

தில்லே.

இப்படி அகம் வேறு, பு:தம்வேறு இருப்பதல்ைதான் மனிதன் எப்பொழுதும் பிறவிக்குள்ளே ஆழ்கிருன். மன மும் வாக்கும் செயலும் ஒன்ருகவே இருந்தால் ஆத்ம சக்தி விருத்தியாகும். இறைவனுடைய திருவருள் அங்கே வந்து பதியும். இந்த கிலே நமக்கு இருப்பதில்லே, கம்முடைய எண்ணங்களெல்லாம் சிதறுகின்றன; வார்த்தைகளெல் லாம் சிதறுகின்றன; பார்வைகளெல்லாம் சிதறுகின்றன. ஐந்து இந்திரியங்களாலே நுகருகின்ற அதுபவங்களிலுங் கூட ஒருமைப்பாடு இல்லை. நம்முடைய வாழ்காளே சிதறிப் போகின்றது. நாது வருஷம் ஒருவன் வாழ்ந்தாலும் உருப் படியாகச் சில காரியங்களேச் செய்தோம் என்று சொல்ல முடியாதபடியே பல மக்கள் வாழ்கிறர்கள். ஒன்றை கன் ருகச் சிந்தித்து, அதைப் பற்றிப் பின்பும் பல காலம் சிக் தித்து, மீட்டும் மீட்டும் சிந்தித்து, அதைப் பற்றியே பல முறை பேசி, அதனுடைய தொடர்பான காரியங்களையே உடம்பினலே செய்து கிறைவேற்றுவதற்குத் தனி ஆற்றல் வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது மனந்தான். மனம் என்னும் மூலக் கருவியை இயக்கிவிட்டால் அத னிடத்திலிருந்து தோன்றுகின்ற எல்லா எண்ணங்களும் செயலாகவும் பார்வையாகவும் மோந்து பார்க்கும் செயலாக வும் வேறு விதமாகவும் விளேகின்றன; ஒவ்வோர். இந்திரி யத்தின் வாயிலாகவும் உருவம் பெறுகின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/39&oldid=535461" இலிருந்து மீள்விக்கப்பட்டது