இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38 அன்பின் உருவம்
கிருர்கள். தலைவர்கள் சிலர் இருக்கிருர்கள். அவர்களுக்கு ஏனையோர்கள் வந்தனே செய்கிருர்கள்.
அப்படி யார் யாருக்கோ வந்தனே செய்துவந்த மணி வாசகருடைய நிலை இப்பொழுது மாறிவிட்டது. எல்லா வந்தனேகளையும் இறைவனுக்கே ஆக்கினர். இதை அவர் எப்படிச் சொல்கிருர் என்பது கவனிப்பதற்குரியது.
"உன்னுடைய திருவடித் தாமரை மலர்களுக்கே என் னுடைய வணக்கங்கள் ஆகும்படி நீ செய்தருளிய்ை" என்கிருர்,
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி.
★
முதலிலே சிந்தனேயைத் திருப்பினன் இறைவன். சிங் தனேயிலிருந்து கண் பார்வை மாறியது. கருத்தை அகக் கண் என்று சொல்வது வழக்கம். அகக் கண் மாறியவுடன் புறக்கண் மாறியது. பார்வை மாறினவுடன் பணிய வேண்டும் என்ற நினைவு வந்தது. அதேைல உடம்பு வளைந்து கொடுத்தது. தலே வணங்கியது. உள்ளம் உணர்ச்சி வசப்பட்டபொழுது முதலிலே பேச்சு வராது. செயல்தான் வரும். செயலுக்கு முன்னலே மெய்ப்பாடு வரும். அதற்குப் பின்பு உணர்ச்சி அமைதிபெற்றுவிட் டால் அதற்கு ஓர் உருவம், உண்டாகும். வாக்கிலிருந்து உணர்ச்சி மயமான வார்த்தைகள் வெளிவரும்.
எம்பெருமானத் தம்முடைய உள்ளத்திலே ஏற்றுக் கொண்ட மணிவாசகப்பெருமான் கண்ணலே அவனுடைய திருவடி மலர்களைக் கண்டார். அந்த மலர்களேயே கும் பிட்டார். வணங்கினர். கீழ் விழுந்து நமஸ்காரஞ் செய் தார். உள்ளத்தில் உள்ள பக்தி உணர்ச்சி பொங்கியது. அதனுடைய விளேவாக வாக்கு எழுந்தது. அந்த வாக்கை ஆண்டவனுக்கே அர்ப்பணமாக்கினர். இறைவன் அவ