ΑέΟ அன்பின் உருவம்
அது முன்பும் அப்படி இருக்கவேண்டுமே. இறைவனைப் பற்றிப் பாடுவதனலே அது மணிவாக்கு ஆயிற்று. வேருேர் இடத்திலும்,
மாசில் மணியின் மணிவார்த்தை என்று பாடுகிரு.ர்.
இறைவன் மாசில்லாத மணி போன்றவன். அந்த மணியைப் பற்றிய வார்த்தையும் மணியைப்போல இருக் கிறது. மாணிக்கம் பிறிதொன்றஞலே ஒளி விடாமல் இயற்கையாகவே ஒளி தருவது. அழுக்குச் சாராமல், பக் கத்தில் உள்ள பொருள்களேயெல்லாம் காட்டுவதோடு கூடப் பிறருடைய உள்ளத்தை ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்த தாக மணி இருக்கும். இந்த மணி வார்த்தையும் ஒளிவிடு வது. உள்ளத்துள் உண்டான ஒளி வாக்கிலே வருகிறது. உள்ளத்துள் உண்மைஒளி உண்டாயின் வாக்கினிலே
ஒளிஉண் டாகும் என்று புதுமைக் கவி பாரதியார் பாடியிருக்கிருர், சிந்தனை இறைவனுடைய கினேவாக ஆகிவிட்டால் உள்ளத்தில் உள்ள இருள் நீங்கிவிடுகிறது. அக இருள் நீங்குவது மாத்திரம் அன்று; அங்கே ஆண்டவனுடைய ஞான ஒளி விளங்குகிறது. அந்த ஒளி உள்ளத்துள்ளே விளங் கும்பொழுது புறத்திலே தோன்றுகின்ற அத்தனையும் அந்த ஒளியின் விளைவாகத்தானே இருக்கும் -
ஒரு வீட்டுக்குள்ளே விளக்கை வைத்துவிட்டு வெளி யில் நின்று பார்க்கிறவர்களுக்கு ஜன்னல் வழியாக வீசு கின்ற ஒளி வேருகவா இருக்கும்? உள்ளே உள்ள ஒளியின் நிறம் சிவப்பாக இருந்தால் சிவப்பாகவும், பச்சையாக இருந்தால் பச்சையாகவும் வெளியிலே தோற்றும். அது காறும் மாயாமலத்தில் அழுந்தி வாழ்கின்ற வாழ்க்கையிலே என்ன என்ன சிந்தனைகள் தோன்றுமோ அவற்றையே உள்ளம் கொண்டிருந்தது. அதனலே எழுந்த எழுச்சிகள்