உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பின் உருவம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதப் பெருங்கடல் 41

எல்லாம் அந்த மயல் அளற்றிலிருந்து வருகின்ற காரியங்க :ளாகவே அமைந்தன. அப்பொழுது எழுந்த வாக்கிலே ஒளி இல்லை; இருள் இருந்தது. இருள் தருமா ஞால வாழ்வில் இருள் தரும் சிந்தனைகளால் சிதறிய மனமுடையவகை வாழ்ந்த மனிதனுக்கு வாக்கிலே இருள்தான் உண்டாகும். செயல்களிலே மேலும் மேலும் இருளே பொங்கி வரும். ஆளுல் சிந்தனே ஆண்டவனுடைய திருவருள் நினேவினலே உயர்ந்துவிடுமானல் அங்கே ஒளி தோன்றுகின்றது. மூலக் கருவாகிய சிந்தனையிலே ஒளி தோன்றிவிட்டால் அதன் விளைவாக விளேகின்ற செயல்களிலே ஒளிதான் நிலவும்: அந்த ஒளியின் கதிரே வார்த்தை.

       சிந்தனையைச் சொல்லி, கண்ணச் சொல்லி, உடம் பைச் சொல்லி, வாக்கையும் சொன்னர், அவை மாத்திரம் போதுமா? இவைகளெல்லாம் நாம் செய்கின்ற செயல்கள். நாம் செயலைச் செய்கிருேம். இன்ப துன்பங்களே நுகர் கிருேம். ஒரு மனிதன் வேலை செய்யும் கர்த்தாவாக இருக் கிருன் போகத்தை அநுபவிக்கின்ற போக்தாவாகவும் இருக்கிருன். இந்த இரண்டு வகையான நிலையும் மனித னிடம் இருக்கின்றன. இறைவனுடைய திருவருளுக் குள்ளே புதைந்துவிட்டால் நம்முடைய செயல்களும் நம் முடைய அநுபவங்களும் மாறிவிடுகின்றன. செயல்களெல் லாம் இறைவனுடைய சார்பிலே செல்லுகின்றன. அப் படியே நாம் அநுபவிக்கின்ற போகங்களெல்லாம் இறை வைேடு தொடர்புடையன ஆகின்றன. சிந்தனையும் பார் வையும் வந்தனையும் வாக்கும் ஆகிய செயல்களெல்லாம். இறைவனுடைய திருவருளினலே மாற்றம் அடைந்து, எல்லாம் அவனேச் சார்ந்தே விளங்கின, மணிவாசகப் பெருமானுக்கு. அவருக்குக் கிடைத்த அநுபவம் எப்படி இருந்தது ? - .