பக்கம்:அன்பின் உருவம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அன்பின் உருவம்

ஐம்புலன்கள் ஆர வந்தன.

அதுகாறும் புலன்களெல்லாம் வெவ்வேறு வகையான அநுபவங்களைக் கொண்டிருந்தன. ஆனல் இப்பொழுது ஆண்டவனுடைய திருவருள் பெற்ற பிறகு அவருடைய ஐம்புலன்களும் இறைவன் மயமாக ஆகிவிட்டன. முன்பு அநுபவித்த அநுபவங்களெல்லாம் வெவ்வேருக இருந்தது மாத்திரமல்ல, புலனுகர்ச்சியால் கிறைவு ஏற்படவில்லை; அந்த அநுபவங்கள் பூரணமாக இல்லே. இப்பொழுது ஐம் புலன்களும் ஆர்ந்திருந்தன; அநுபவ கிறைவினலே இன் புற்றன. அந்த இன்ப அநுபவம் உலகத்தோடு பொருந்திய

& அநுபவம் அன்று.

ஐம்புலன்கள் ஆர

வந்தனே ஆட் கொண்டுஉள்ளே புகுந்த விச்சை

மாலமுதப் பெருங்கடலே! ஐம்புலன்களும் நிறைவு பெற வேண்டுமானல் எல்லே யில்லாத ஒர் அநுபவம் கிடைத்தால்தான் நிறைவு பெறும். உலகிலுள்ள பொருள்கள் யாவும் காலத்துக்கும் இடத் துக்கும் அகப்பட்டன. கால எல்லே, இட எல்லே ஆகிய இரண்டும் உயிர்களுக்கு உண்டு உயிர் வாழ்க்கைக்கு உண்டு. கால தேச பரிச்சின்னம் என்று அவற்றைச் சொல் வார்கள். இந்த இரண்டுக்குள்ளே அகப்பட்ட அநுபவம் எல்லேக்குள்ளே தான் நின்றுவிடும். மனிதனுக்கு நூறு வயசு என்று எல்லே இருந்தாலும், எல்லா மக்களும் நூறு வயசு வாழ்ந்திருந்து அநுபவத்தைப் பெறுவதில்லை. அப் படிப் பெற்ருலுங்கூட நூறு என்ற எல்லையிலே கின்று விடுகிறது. எல்லேயில்லாத அநுபவம் பெறவேண்டுமானல் எல்லையில்லாத பொருளோடு சார்ந்திருந்தாலன்றி , அந்த அநுபவம் வராது. . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/48&oldid=535470" இலிருந்து மீள்விக்கப்பட்டது