பக்கம்:அன்பின் உருவம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அமுதப் பெருங்கடல 东岱、

ஒரு கிண்ணத்தில் தண்ணிர் வாங்கி ஒருவன் உண்ணு கிருன். அந்தக் கிண்ண் நீரை உண்ட பிறகு அவனுக்குத் தண்ணிர் இல்லையாகின்றது. இப்படியே தண்ணிரை கிரப்பிய எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதற்கு எல்லே உண்டு. பெரு வயிறன் ஒருவன் எத்தனே தண்ணிரைக் குடித்தாலும் நிறைவு பெருத தாகம் கொண்டவகை இருக் கிருன். அப்பொழுது உலகிலுள்ள எல்லேக்கு அகப்பட்ட நீர்நிலை எதனுலும் அவனுடைய வேட்கையைப் போக்க முடியாது. அதைத் தீர்க்க்வேண்டுமானல் கடல் ஒன்றில்ை தான் முடியும். காரணம்: அவனுடைய தாகம் எல்லே யற்றது. கடலும் எல்லேயற்றது.

ஐம்பொறிகளின் நுகர்ச்சிகளால் பூரணத் திருப்தி அடையாமல் நாம் வாழ்கிருேம். ஐந்து புலன்களினலே உண்டான அநுபவங்களுக்கு நிறைவு ஏற்பட்டுவிட்டால் மனிதனுக்கு ஆசை அற்றுவிடும். அந்த அநுபவம்குறைவாக இருப்பதல்ைஆசை மேலும்வளர்கிறது. அது வளர வளரப் பிறவி மேலும் தொடர்கிறது. ஐம்புலன்களாலும் முற்ற அதுபவிக்கின்ற ஆற்றல் யாருக்காவது இருக்குமானல் அப் பொழுது அவனுக்கு ஞானம் வந்துவிடும். ஆனல் யாருக்கும் புல அநுபவங்களிலே திருப்தி உண்டாவதே இல்லை. முழு நிறைவு உண்டாக வேண்டுமானல் அது உலகத்தோடு பொருக்திய அதுபவமாக இராமல் இறைவனேடு பொருக்

திய அநுபவமாக இருக்கவேண்டும். ஆண்டவன் புலன்

களுக்கு அப்பாற்பட்டவன், அவன் இந்த உலகத்துக்கு அப் பாற்பட்டவன் என்று சொல்லுகிருேம். ஆனல் ஆண்டவ னுடைய திருவருள் பெற்றவர்களுக்கு அவன் ஐம்புலன் களும் நிரம்பும்படியான அநுபவத்தைத் தருகிருன் ஐம் புலன்களின் கிறைவு அப்புலன்களே அமைதிபெறச் செய்து விடும். வயிறு நிரம்ப உண்ட குழந்தை தூங்கிவிடுவது போல அவை அப்போது அடங்கிவிடும்.