உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பின் உருவம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது அநுபவத்தில் கனிந்து வந்த பழமொழி. என்பையும் உருக்கும் பாடல்களை மாணிக்கவாசக சுவாமிகள் பாடினார். “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று கூறும் விவிலிய நூலைப் படித்த கிறிஸ்தவராகிய ஜி.யூ.போப் துரை திருவாசகத்தைப் படித்தார்; உருகினார். “இவரைக் காட்டிலும் எளிமையுள்ளவர் யார்?” என்று வியந்தார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். திருவாசகத்தின் பெருமை இக்காலத்திலும் மங்காமல் இருப்பதற்கு இது ஒர் உதாரணம்.

சைவத் திருமுறைகளில் எட்டாவது திருவாசகமும் திருக்கோவையாரும். திருவாசகம் 51 பகுதிகளையும் 656 பாடல்களையும் உடையது. அவற்றில் முதலில் இருப்பது சிவபுராணம் என் னும் கலிவெண்பா. அடுத்து, கீர்த்தித் திருவகவல், திரு அண்டப் பகுதி, போற்றித் திருவகவல் என்ற மூன்றும் உள்ளன. இந்த நான்கும் பல அடிகளே உடைய பாடல்கள்.

திருக்கோவையாரில் 400 பாடல்கள் உள்ளன. அது ஐந்திணைக்கோவை என்னும் பிரபந்த அமைப்பை உடையது. அதை இறைவனே எழுதி அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையெழுத்திட்டதாக ஒரு வரலாறு உண்டு. திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாட்டுடைத் தலைவகை வைத்துப் பாடிய நூல் அது. அதனால் திருச்சிற்றம்பலக் கோவையா ரென்றும் வழங்கும். கிருவாசகத்தோடு ஒத்த பெருமை உடைய தாதலால் அதைக் கோவைத் திருவாசகம் என்றும் சொல்வதுண்டு. நூல்களின் பெயர்களே மதிப்போடு சொல்லும்போது பலர்பாலுக்குரிய ஆர்விகுதி சேர்த்துச் சொல்வது தமிழ் மரபு. அப்படிச் சிறப்புப் பெற்றவை நாலடியார், திருக்கோவையார், திருக்களிற்றுப்படியார், சிவஞான சித்தியார் என்பன. திருக்கோவையாருக்கு உள்ள சிறப்பை ஆர்விகுதி தெரிவிக்கிறது.

திருவாசகம் முழுவதற்கும் பழங்காலத்தில் யாரும் உரை எழுதியதாகத் தெரியவில்லை. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் விரிவாக எழுதியுள்ளார். அணிமையில் சில சில பகுதி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/5&oldid=1178993" இலிருந்து மீள்விக்கப்பட்டது