பக்கம்:அன்பின் உருவம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அமுதப் பெருங்கடல் !;9

இரண்டும் இலித் தனிய னேற்கே,

'இரண்டும் கெட்டான்' என்று உலக வழக்கில் ஒரு தொடர் வழங்குகிறது. தக்கது இன்னது, தகாதது இன் னது என்று அறியும் அறிவில்லாவன் என்று சொல்வது உண்டு. இம்மை வாழ்வும், மறுமை வாழ்வும் கெட்டவன் என்று சொல்வதே சிறப்பாகும்.

மாணிக்கவாசகரே தம்மை இரண்டும் கெட்டான் என்று சொல்லிக்கொள்ளும்போது மற்றவர்கள் எம் மாத்திரம்!

சிந்தனை நின் றனக்காக்கி நாயி னேன்றன்

கண் இணே நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குஉன்

மணிவார்த்தைக்கு ஆக்கிஐம் புலன்கள் ஆர வந்தனை.ஆட் கொண்டுஉள்ளே புகுந்த விச்சை

மால்.அமுதப் பெருங்கடலே மலேயே நின்னைத் தந்தனை,செந் தாமரைக்காடு அனைய மேனித்

தனிச்சுடரே! இரண்டுமிலித் தனிய னேற்கே.

(என் எண்ணங்களையெல்லாம் உனக்காக ஆக்கிக்கொண்டு, நாய் போன்ற என் இரண்டு கண்களேயும் உன் அழகிய பாத மாகிய மலர்களுக்கு அர்ப்பணம் செய்யச் செய்து, என் வணக்கங் - களையும் அந்த அடி மலர்க்கே ஆகும்படி செய்து, என் வாக்கை உன் மாணிக்கம் போன்ற ஒளி கிரம்பிய வார்த்தைகளுக்கு ஆக்கி, என் ஐம்புலன்களும் நிரம்பும்படியாக வந்து அடியேனே அடிமை யாகக்கொண்டு என் உள்ளே புகுந்த வித்தையில் வல்ல மிகப் பெரிய அமுதக் கடலே மலை போன்றவனே செந்தாமரைக் காடு போல உள்ள கிருமேனியையுடைய ஒப்பற்ற சுடரே! இரண்டுங் கெட்டானும் துணேஇல்லாதவனுமாகிய இந்தத் தனியவனுக்கு ே உன்னேயே தந்துவிட்டாய்.

4.