பக்கம்:அன்பின் உருவம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அருமையும் எளிமையும்

ஒரு பெண் ணுக்குக் கல்யாணமான கதையைச் சொல்கிருர் ஒரு மனிதர்; அழகும் அறிவும் பொருளும் மிகப் பெற்ற ஒரு மாப்பிள்ளே கிடைத்ததைச் சொல்கிருர்.

'அந்த மாப்பிள்ளை கிடைத்தது பெண்ணினுடைய அதிருஷ்டங்தான். ஊரில் எத்தனையோ பேர் பெண்களே வைத்துக்கொண்டு மாப்பிள்ளே எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிருர்கள். பணத்தாலோ பதவி யாலோ குறைவின்றி மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் அவர்கள். அவர்கள் இந்த மாப்பிள்ளையைப் பற்றிக் கேட்டிருக்கமாட்டார்கள். ஒருகால் கேட்டிருந்தாலும் பார்த்திருக்கமாட்டார்கள்." + - -

'என்ன அப்படி உயர்ந்த மாப்பிள்ளை?” “உயர்ந்தவன் என்று ஒரு முறை சொன்னல் போதாது; ஆயிரந்தடவை சொல்ல வேண்டும். அந்தப் பிள்ளை, யாருடைய கண்ணிலும் தென்படுவதில்லை. பார்க்க வருகிற வ்ர்களுக்கெல்லாம் போக்குக் காட்டி மறைந்து விடுவான்.”

'பின் இவளுக்கு எப்ப்டிக் கிடைத்தான்? "அதுதானே சொல்ல வருகிறேன்? அவர்களால் அணுகுவதற்கரிய அவன் இவளேத் தானே வந்து கேட்டு மணந்து கொண்டான். உலகமே அப்போது பிரமித்தது. அவனே எளிதில் காணவே முடியாமல் இருக்கும்போது, அவனே வலிய வந்து மணம் புரிந்தான் என்பதை மற்ற வர்கள் எப்படி கம்புவார்கள்?

“இப்போது அவர்கள் எங்கே இருக்கிறர்கள்'