உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பின் உருவம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அன்பின் உருவம்

"அவரவர்கள் இடத்தில் இருக்கிருர்கள். இன்னும்

பெண்ணே அழைத்துக்கொண்டு போகவில்லை. கழுத்தில்

தாலி கட்டியதோடு சரி. எப்போது அழைத்துக்கொண்டு போவானே, தெரியவில்லை.”

'பெண் பாவம் பொல்லாது. அவள் எப்படித் துடிக்கிருளோ?

"அவர் எப்போது வருவார், கான் அவரை எப்போது பார்ப்பேன் என்று ஏங்கியபடியே கிடக்கிருள் அவள்.”

"או

அந்தப் பெண்மணியின் நிலையில் இருந்தார் மணி வாசகர். இறைவன் அவரை ஆட்கொண்டான். அப்பால் அவனுடன் ஒன்றுபடவேண்டும் என்ற ஆசை மீதுளர்ந்தது அவருக்கு. அவனேப் பிரிந்து உலக வாழ்வில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை. அவனுடைய அருமைப் பாட்டை யும், தம்மைக் கருணையினல் ஆட்கொண்ட எளிமையையும் நினைத்துப் பாாக்கிருர், அவ்வாறு எளிவந்து ஆட் கொண்ட பெருமான் இப்போது அரியனுக இருக்கிருனே என்று எண்ணி ஏங்குகிரு.ர். -

அவன் அரியவன். மிக உயர்ந்த நிலையில் உள்ளவர் களாகிய வானவர்களும் அறியாத கோலம் படைத்தவன். அத்தகையவன் கண் காண வந்து ஆட்கொண்டான். திருத் தில்லையில் யாவரும் காணக் கூத்தகை விளங்குகிருன். ஆயினும் அவனே எளிதில் அணுக முடியாது. அத்தகைய வன் வந்து ஆட்கொண்டான் என்ருல் எத்தனை சிறப்பு!

மேலே வானவரும்அறி யாததோர் கோல மேlஎன ஆட்கொண்ட கூத்தனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/58&oldid=535480" இலிருந்து மீள்விக்கப்பட்டது