இனி என் செய்வது
இறைவனிடம் இடையருத அன்பர்கள் அவர்கள். எப்போதும் இறைவனேயே கினேந்து வாழ்கிருர்கள். இறை வனைப் பற்றி யார் பேசினலும் அவர்களுடைய கண்களில் நீர் துளும்பும். அவர்கள் உள்ளம் எவ்வளவு மெல்லியது! எவ்வளவு நெகிழ்ச்சியை உடையது இறைவனுடைய புகழை நினைக்கும்பொழுதெல்லாம் கனலிலே பட்ட மெழு கைப் போல அவர்களுடைய உள்ளம் கரைகிறது.
எத்தனை பிறவி எடுத்தாலும் உலக இன்பத்தில் ஈடு படுபவர்களுடைய மனம் அப்படி இருப்பதில்லை. படலம் படலமாகப் பற்றும் ஆசையும் கோபமும் பிற தீய குணங் களும் செறிந்து செறிந்து மனம் பாறையாகிப் போய்விடு கிறது. அது காளாக ஆக இறுகுகிறதே ஒழிய நெகிழ்வ தில்லை. ஆனல் இறைவனிடம் அன்பு ஏற்பட்டுவிட்டால் பெரிய ஆச்சரியம் நிகழ்கிறது. அந்தக் கருங்கல் நெகிழ் கிறது; அழல் சேர்ந்த மெழுகுபோல நெகிழ்கிறது.
மனம் நெகிழ்வதை எப்படி அறிவது? ஒருவருடைய துன்பத்தைக் கண்டால் இரக்கம் உண்டாகும். அவர் களுடைய பேச்சில் ஒரு குழைவு தோன்றும் செயலில் மென்மையும் பணிவும் அமையும். அவர்கள் அன்பி ல்ை குழைந்து நெகிழ்வதை அவர்களுடைய உடம்பு, வாக்கு, உள்ளம் எல்லாமே காட்டும். . . . " மனிதர் கூட்டத்தில் இப்படி இறைவனிடம் அன்பான மனம் கொண்டு அழல் சேர்ந்த மெழுகுபோல இருக்கிற வர்களை மற்றவர்கள் பார்க்கிருர்கள்; பழகுகிருர்கள். ஆனல் அவர்களுடைய அன்பு நிலையை உணர்ந்துகொள்வ