56 அன்பின் உருவம்
தில்லை. ஒருகால் அது அவர்கள் உள்ளத்தில் எப்போ தாவது உறைத்தாலும், மறுகணத்திலே விலகிய பாசி மறு படியும் மூடிக்கொள்வதுபோல, பழைய கடுமையே வந்து விடுகிறது.
நாமாக உருகாவிட்டாலும் பிறர் உருகுவதைக் கண்
டாவது உருகலாம். எவ்வளவுதான் கல் மனம் படைத்த வராக இருந்தாலும் ஒரு வீட்டில் யாராவது இறந்ததற்கு அழுதால், அங்கே செல்லும்போது தம்மையும் அறியாமல் கண்ணில் நீர் வருகிறது. குழ்கிலேயின் வசப்பட்டுச் செயல் செய்வது மனிதனுக்கு உரிய குணம்.
ஆணுல், அன்பர்களின் நெகிழ்ச்சியைக் கண்டு நெகி ழாதவர்கள் இருக்கிருர்கள். பக்திச் சூழ்கிலே அவர்களுக்கு உறைப்பதில்லை. இரும்புப் பொடியிலே கட்டையை வைத் தால் அப்பொடி அதில் ஒட்டுமா? ஆயிரம் ஆண்டுகள் நீரிலே கிடந்தாலும் இரும்புக்குள் தண்மை ஏறுமா? அப் படியே கல் நெஞ்சர்களுக்குப் பக்தர்களின் அருகில் வாழ்ந்தும் அவர்கள் உள்ளம் நெகிழ்வதில்லை. அது மாத் திரமா ? சில சமயங்களில் அந்த அன்பர்களின் செயலைக் கண்டு பரிகாசம்கூடச் செய்கிருர்கள்.
அன்பில்ை அகம் கரையும் அன்பர்கள் எப்போதும் இறைவனுடைய திருவடியே இலக்காக இருப்பார்கள். மற்றவர்கள் மின்னுகிற பொன்னேக் கண்டு களித்து அதன் பின்னே சென்று அலைவார்கள். ஆனால் அடியார் களோ மின்னுதலையுடைய பொற்கழலே அணிந்திருக்கும் இறைவன் திருவடியைக் காண்பதே தொழிலாக, அதுவே விளையாட்டாக, அதுவே இன்ப நுகர்ச்சியாக இருப்பார் கள். அவனடியையே தொழுது வாழ்வார்கள்.
நின்பால் அன்பாம் மனமாய்
அழல்சேர்ந்த