பக்கம்:அன்பின் உருவம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி என் செய்வது! 57

மெழுகே அன்னும் மின்ஆர்

பொன்ஆர் கழல்கண்டு தொழுதே.

இப்படித் தொழுகிறவர்களுக்கு இறைவன் தரிசனம் தந்தான். அவர்கள் அவனுடைய உபதேசம் பெற்ருர்கள். அவனை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் அவனையே தொடர்ந்தார்கள் தம்முடைய வீட்டையும் சுற்றத்தாரை யும் விட்டுப் புறப்பட்டுவிட்டார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் மற்றவர்கள். ஏதோ பைத்தியக் காரக் கூட்டம் போகிறதென்றே கினைத்தார்கள். ஆனல் அவர்கள் போன பிறகு நின்றிருந்த இவர்கள் கண்ட சுகம் என்ன? தினமும் ஒன்றுபோனல் ஒன்ருகக் கவலை வந்து அவர்களைப் பிய்த்துத் தின்கிறது. இந்த வாழ்வு இவ்வளவுதான?’ என்று அவர்களிற் சிலருக்கு உணர்வு பிறக்கிறது. முன்பே இறைவனைத் தொடர்ந்து போனர் களே, அவர்களோடு சென்றிருக்கலாமே; அவர்களைப் பரி காசம் செய்தோமே. இங்கே இருந்து ஏதோ சாதிக்கப் போவதாக அல்லவா கினேத்துக்கொண்டிருந்தோம்? இப் போது அவர்கள் போனதை எண்ணி வருந்துகிருேமே” என்று நைகிருர்கள்.

இனிமேல் அந்த வழி தெரியுமா? தாமாக முயன்று போகத்தான் முடியுமா? பல பிறவிகளில் இறைவனிடம் அன்பு செய்து அவனேத் தரிசனம் செய்த பெரியவர்கள் அவர்கள். அவர்கள் அடியைப் பின்பற்றிச் சென்றிருங் தால் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறட்டுமென்ற, கருணையில்ை அவர்கள் அழைத்துக்கொண்டு சென்றிருப் பார்கள். அவர்கள் போன வழியை அறிவதே அருமை: அறிந்து அந்த வழி செல்வது அதைவிட அருமை, சென்