பக்கம்:அன்பின் உருவம்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 அன்பின் உருவம்

முலும் பல தடைகள் இடையிலே உண்டாகும்; அவற்றை வென்று மேற்போவது மிக அருமை.

பல அன்பர்கள் பிறந்த கிலத்தில் இவர்கள் பிறந்தார் கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தார்கள். அவர் கள் நாளாக ஆக அன்பிலே பழுத்தார்கள். இவர்கள் நெகிழாமல் கின்ருர்கள். கெற்பயிர் வளர்ந்து கதிர் முற்றிச் சாய்வதுபோல அவர்கள் பயன் பெற்ருர்கள். இவர்கள் கெருஞ்சிப் பூ முள்ளாகப் பழுத்ததுபோலத் தமக்கு ஒரு பயனுமின்றி வளர்ந்து பிறருக்குத் துன்பம் விளேத்தார்கள். இப்போது அந்த அன்பர்கள் போனபிறகு, "நாம் ஏமாந்து போய்விட்டோமே!” என்று எண்ணி அழு. கிருர்கள்.

அழுதேன், நின்பால் அன்பாம் மனமாய்

அழல்சேர்த்த மெழுகே அன்னர் மின்ஞர் பொன் ரூர்

கழல்கண்டு தொழுதே உன்னத் தொடர்ந்தா ரோடும்

தொடராதே. இப்படி அவர்களுள் ஒருவர் கூறுவதுபோல மணிவாசகர் சொல்லுகிரு.ர்.

★ . இப்போது கினைத்துப் பார்த்தால், நாம் என் பிறக் தோம்? என்று தோன்றுகிறது. காற்றுள்ளபோதே ஆாம் றிக்கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் அவர்கள். பயன் பெற வேண்டிய காலத்தில் பிறந்தும், பயன்பெற்றவர் களப் பார்த்தும், அறிவு பெருமல் வீளுகப் பொழுதைப் பழுதாக்கிவிட்டாயே! என்று அவர்கள் உள்ளம் அவர் களைக் குத்திக் காட்டுகிறது. பழுதே பிறந்தேன்.