இனி என் செய்வது! 59.
இனிமேல் இறைவனே அடைந்து பணிந்து பேறு பெற லாம் என்ருல் அதற்கு என்ன உரிமை இருக்கிறது? 'இறைவா! அவர்கள் கின்கழல் கண்டு தொழுதார்கள். அவர்களே ஆட்கொள்ள நீ எழுந்தருளினய், அதுபோல் இப்போதும் வரவேண்டும்" என்று சொல்லலாமா? நேரத் தில் செல்லாமல் வண்டியைத் தவறவிட்ட புத்திசாலி களல்லவா இவர்கள்? இவர்களுக்கே குற்றம் தெரிகிறது. ‘கடவுளிடத்திலே சென்று என்ன உரிமை கொண்டாடிப் பணிவது? கூட்டத்தோடு கூட்டமாக எளிதிலே போகும் வாய்ப்புக்கிடைத்தும் கைவிட்ட பாவியர் என்று சொல்லிப் புகுவதா? என்று எண்ணும்போது இவர்களுக்கு மேலும் மேலும் அழுகைதான் வருகிறது. அன்று இறைவனே நினைந்து நெஞ்சு நெகிழ்ந்து அழ வகையில்லாதவர்கள், இன்று, “உன்னத் தொடர்ந்தாரோடும் தொடர்ந்து வர வில்லையே!” என்று அழுகிருர்கள். 'பழுதே பிறந்தேன்' என்று அரற்றுகிரு.ர்கள். 'என் கொண்டு உன்னைப் பணிகேனே!” என்று புலம்புகிரு.ர்கள்.
அவருள் ஒருவராகத் தம்மை வைத்துப் பாடுகிருர் மாணிக்கவாசகர்.
அழுதேன் நின்பால் அன்பாம் மனமாய்
அமுல்சேர்ந்த மெழுகே அன்ஞர் மின்ஆர் பொன்ஞர்
கழல்கண்டு - - தொழுதே உன்னத் தொடர்ந்தா ரோடும்
தொடராதே. - - பழுதே பிறந்தேன்; என்கொண்டு உன்னைப் பணிகேனே?
(இறைவனே! நின்னிடம் அன்பாக உள்ள மனம் உடையவ ராகி, நெருப்பைச் சேர்ந்த மெழுகைப்போல உருகுகிறவர்களாகி, மின்னுதலேயுடைய பொன்னலான கழலே அணிந்த நின் கிருவடி