பக்கம்:அன்பின் உருவம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அன்பின் உருவம்

யைத் தரிசித்துத் தொழுது நின்னேத் தொடர்ந்தவர்களோடும் தொடர்ந்து செல்லாமல் (நான் தனித்திருந்து) அழுதேன்; குற்றம் உண்டாகவே பிறந்தேன். (இனிமேல் உன்னைப் பணிந்து உய்யலாம் என்ருல்) என்ன உரிமையைக் கொண்டு உன்னைப் பணிவேன்?

அழல் - நெருப்பு. மின் ஆர் - மின்னுதல் பொருந்திய பொன் ர்ை கழல்; அன்மொழித் தொகை. அன்னுராகித் தொடர்ந்தா ரோடும், தொடராதே அழுதேன். பழுதே குற்றம் உண்டாகும் வண்ணம்; வீணுக எனலும் ஆம். என் கொண்டு - என்ன உரி மையை மேற்கொண்டு; என்ன தகுதியைக் கொண்டு என்பதும் பொருந்தும். பணிகேன் - வணங்குவேன்.)

மாணிக்க வாசகர் இறைவன் குருநாதனுக வர, அவனிடம் உபதேசம் பெற்ற பிறகு, அவன் உடன்வந்த பக்தர்கணங்களோடு மறைய, அதனே ஆற்ருமல் பாடியது இது என்றும் சொல்வது உண்டு.

இறை நெறியில் வாழ்நாளே அமைத்துக்கொண்டு விருப்பு வெறுப்பின்றி இன்னலாலும் சுகத்தாலும் வேறு பர்டடையாமல் வாழும் அன்பர்கள் இந்த உலகிலேயே இறைவனுடைய அணிமையில் இருக்கும் இன்பத்தை நுகர் கிருர்கள். அத்தகையவர்கள் எக்காலத்தும் இருக்கிருர்கள். அவர்கள் செய்வன செய்து இந்த உடலேப் போட்டுச் சென்றபிறகு அவர்கள் புகழுடம்பு இவ்வுலகில் வாழ்கிறது. உடலத்தை நீத்த பிறகு அவர்கள் புகழ் மிகமிகப் பரவு கிறது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் அருமையை அறியாமல் இருந்துவிட்டு அவர்கள் மறைந்த பிறகு அவர் களுடைய உண்மை நிலையை உணர்ந்து, "ஐயோ! அப் போது அவர்கள் போனவழியில் நாமும் செல்லவில்லையே!” என்று இரங்குபவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் சொல்வதற்குரிய பாட்டு இது என்று கொண்டாலும் பிழை இல்லை.