பக்கம்:அன்பின் உருவம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பின் உருவம் 64.

னுடைய திருவருள் பெற்றவர்கள் வேறு வேருகத் தம் அநுபவங்களே விரித்து உரைக்கிருர்களோ, அப்படியே உபநிஷத்தின் பகுதி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இறைவனைப் பற்றிப் பேசுகிறது. இப்படிப் பேசி விட்டு, 'அவன் அறியொளுதவன்” என்றும் முறையிடுகிறது. 'இது அன்று; அது அன்று" என்று சொல்லத் தெரிகிறதே ஒழிய, "இதுதான்!” என்று சுட்டிச் சொல்வதற்கு அதலுைம் முடிவதில்லை. -

"அல்லே பீதல்ல்ே பீ தென மறைகளும் அன்மைச்

சொல்லி னுல்துதித் கிளேக்கும்.இச் சுந்தரன்.'

என்று பரஞ்சோதி முனிவர் சொல்கிருர்,

தேவர்களுக்குத் தெரிய அரிய பொருளாக இருக்கும் ஆண்டவன் எல்லோருக்கும் அறிவு தரும் மூல பண்டார மாகிய மறையின் ஈருகிய உபநிடதங்களுக்கும் அறிவரிய வனுக இருக்கிருன். உபநிடதம் அவனைப் பற்றியே பேசு கின்றன. அவனுடைய சூழ்நிலையையெல்லாம் சொல்கின் றன. ஆனல் அவனேத் தொடர்ந்து சென்று சுட்ட இயலாமல் கின்று விடுகின்றன.

மறையில் ஈறும்முன் தொடரொ ளுதநீ.

நெட்டையாக இருக்கிறவன் மரத்தில் உள்ள கனியை எட்ட முடியாமல் கின்ருலும் குட்டையாக இருக்கிறவன் அறிவாளியாக இருந்து, மரத்தில் ஏறிப் பழத்தைப் பறிக்கலாம் அல்லவா? வான காடருக்கு அரிய வ்ளுகிய இறைவனைத் தம்முடைய அறிவைக்கொண்டு கண்டுபிடிக்கிறவர்கள் யாரேனும் இருக்கலாமோ? அப்படி யும் யாரும் இல்லை. எந்த காட்டில் எவ்வளவு அறிவோடு இருந்தாலும், யட்சர், கின்னரர், கந்தருவர் என்று பல