பக்கம்:அன்பின் உருவம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 . அன்பின் உருவம்

செய்யவில்லை. ப்முக்காத மாங்காயானலும் அதன்மேல். ஆசையுள்ள பையன் அப்படியே அதைக் கடித்தாற்போல இறைவன் செய்தான். அவனுடைய அடியாகுைம் முறை எனக்கு இனிதாக இருந்தது. என்னே ஆட்கொண்ட தளுல் அவனுக்குத்தான் இன்னுமை உண்டாகியிருக்கவேண்டும். எனக்கோ இனிமையை அன்றி வேறு ஒன்றும் இல்லை. அவன் எவ்வளவு இனிமையாக ஆண்டுகொண்டான்! அதை நினைக்கும்போதே எனக்கு வியப்பு மீதுார்கிறது: இப்படியெல்லாம் சொல்வதற்குப் பதிலாகச் சுருக்கமாக, 'ஆ ஆ! என்ன வியப்பு என்ன்ே எம்பெருமான் இனிதாக ஆண்டுகொண்ட விதத்தை எவ்வாறு சொல்வேன்' என் கிருர். 'என்னே ஆண்டுகொண்டவாறு-” என்று ஆச்சரி யத்தில் மூழ்கி வாக்கியத்தை முடிக்காமலே கிறுத்துகிரு.ர்.

வான நாடரும் அறியொ ணுதநீ

- மறையில் ஈறும்முன் தொட்ரொ ளுதநீ ஏனே நாட்ரும் தெரியொளுதநீ

என்னே இன்னிதா ஆண்டு கொண்டவா!

(வான காடர். தேவர். மறையில் ஈறு - வேதாந்தம்; உபநிட தங்கள். ஏன் மற்ற இன்னிதா - இனிதாக செய்யுள் விகாரம்; ஒசையின் பொருட்டு இனிதா என்பது இன்னிதா என்று வந்தது. ஆண்டு கொண்டவா ஆண்டுகொண்ட வாறு என்னே என்று விரிப்பதற்குரியது.)

×

• இறைவனுடைய திருவருளால் அவனுக்கு ஆளாகிய பிறகு, சற்றே பழைய நிலையை நினைத்துப் பார்க்கிருர் மாணிக்கவாசகர். நெடுந்துாரம் கடந்து வந்தவன் எங் கெங்கே தங்கிளுேம் என்று எண்ணிப் பார்க்கிறது போலப் பார்க்கிருர் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அப்போது இறைவனே உணராமல் வீணே பொழுதுபோக்கியதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/72&oldid=535494" இலிருந்து மீள்விக்கப்பட்டது