அம்மானைப் பாட்டு
இப்பொழுது மணிவாசக நாயகியின் காதலைப் பார்க்கலாம். -
மாணிக்கவாசகப் பெருமான் எம்பெருமானிடம் அள வற்ற காதல் கொண்டவர். அவருடைய பக்தி, அழகிய காதலன் ஒருவனிடம் பருவம் வந்த மடமங்கை ஒருத்தி கொண்ட காதலைப் போன்றது. இவ்வாறு பக்தி செய் வதைச் சன்மார்க்கம் என்று சொல்லுவார்கள்.
இறைவனே வழிபடுகின்ற நெறிகள் கான்கு. அவை தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன் மார்க்கம் என்பன. எசமானனிடம் ஊழியன் பணிவாக கின்று ஏவல் செய்து அன்புடன் கடமை ஆற்றுவதுபோல கிற்பது தாசமார்க்கம், அல்லது அடிமை நெறி. தங்தையி னிடம் அன்புடைய பிள்ளே அன்பு வைப்பதுபோல அமை வது சற்புத்திர மார்க்கம், அல்லது சேய் கெறி. நட்புடைய தோழனிடம் அன்பு கொள்வது போன்றது சகமார்க்கம், அல்லது தோழமை நெறி. காதலன் காதலியிடையே உள்ள உறவுமுறையைப் போல அன்பு செய்வது சன்மார்க்கம், அல்லது காதல் கெறி, மாணிக்கவாசகர் பிறப்பால் ஆடவ ராக இருந்தாலும் பாவனையினல் தம்மை ஆண்டவனுடைய காதலியாக்கிக்கொண்டு அன்பு செய்து சன்மார்க்க கெறி யிலே கின்றவர். - - -
இறைவன் மாணிக்கவாசகரைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டான். அத் தலம் இப்போது ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது. மணிவாசகப் பெருமான் திருவவதாரம் செய்தது திருவாதவூர். அது நல்ல தலம்.