அம்மானேப் பாட்டு - 73
அவர் பலகாலம் பாண்டியனுக்கு அமைச்சராக இருந்து வாழ்ந்த இடம் மதுரை. அது பாண்டிநாட்டுத் தலங்களுக் குள் மிகச் சிறந்தது. இறைவன் அவரை அவர் பிறந்த தலத்திலே ஆட்கொண்டிருக்கலாம்; அல்லது உத்தியோகம் செய்த மாபெருங் தலமாகிய மதுரையிலே ஆட்கொண் டிருக்கலாம். மதுரைக்கு அருகிலும் பல தலங்கள் உண்டு. அவ்விடங்களிலும் மாணிக்கவாசகருக்கு அருள் செய்திருக்க லாம். அவ்வாறெல்லாம் செய்யாமல் மதுரைக்கும் வாத ஆருக்கும் நெடுந்து ரத்தில் இருக்கும் திருப்பெருந்துறைக்கு வரச்செய்து ஆட்கொண்டான். அப்படிச் செய்ததில் ஒரு பொருத்தம் இருக்கிறது.
ஆண்டவனுக்குப் பல திரு நாமங்கள் உண்டு. ஒவ் வொரு திரு காமமும் எம்பெருமானுடைய குணச்சிறப்பால் அமைந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வோர் இயல்பைச் சிறப் பாகச் சுட்டி நிற்பது. ஒவ்வொரு தலத்திலும் இறைவன் சிறப்பாக ஒரு திரு காமம் விளங்க எழுந்தருளியிருக்கிருன். திருப்பெருந்துறையில் ஆத்மநாதன் என்ற திருநாமத்தோடு விளங்குகிருன். - -
மாணிக்கவாசகர் நாயகியின் நிலையில் நின்ருர், மன மாகாத கன்னிப்பெண்ணுகிய இந்த மணிவாசக நாயகியை இறைவனகிய நாயகன் ஆட்கொண்டருள வேண்டும். ஆடவன் ஒருவன் திருமணம் செய்துகொள்ளும்போது அதற் கென்று தனியே கோலம் புனேந்து வருவான். அவன் வெவ் வேறு சமயங்களில் வெவ்வேறு செயல்களே ஆற்றுபவன். அவற்றிற்கு ஏற்றபடி அவ்வப்போது வெவ்வேறு கோலங் களேக் கொள்பவன். வேட்டை ஆடும் கோலத்தில் இருக்கும் போது வேட்டை ஆடுவான். ஆட்சிபுரியும்போது திருமுடி
தரித்துச் செங்கோல் ஏந்தியிருப்பான். மணம் புரியும்போது
மணவாளக் கோலம் பூண்டு மணேயில் இருப்பான். இறைவனுடைய கோலங்கள் பல. அவனுடைய பெயர்