பக்கம்:அன்பின் உருவம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7/: அன்பின் உருவம்

ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோலத்தை நினைப்பூட்டுகிறது. ஆத்மநாதன் என்பது மணவாளக் கோலத்தை நினைக்கச் செய்கிறது. எப்படி என்று பார்க்கலாம்.

உலகில் உள்ள உயிர்களேயெல்லாம் பசுக்கள் என்று சொல்வார்கள். அவற்றுக்கெல்லாம் தலைவனகிய இறை வனைப் பசுபதி என்பர். உயிர்கள் உடம்பு பெற்று வாழ் கின்றன. அந்த உடம்பு ஆண் என்றும் பெண் என்றும் இரண்டு வகையாக அமைந்திருக்கிறது. பெண்களே ஆடும் நாடகத்தில் பெண் ஒருத்தி ஆண்வேஷம் போடுகிருள்; மிகவும் கன்ருக நடிக்கிருள். அவள் அணிந்திருக்கும் ஆடை ஆண் அணியும் ஆடை. குரலேக்கூட மாற்றிக்கொண்டு ஆணேப் போலவே பேசுகிருள். ஆனாலும் அவள் ஆளுகை மாறமுடியாது. பெண்ணுக நடித்தாலும் ஆணுக நடித் தாலும் யாவரும் பெண்களே. ஆண் உடை அணிந்தமை யால் பெண் ஆணுகிவிடமாட்டாள். அந்த நாடகம் கலையும் வரையில் இந்த உண்மை தெரியாது. மேடை நாடகத்தில் உடையினல் பெண் ஆணுகத் தோற்றுவது போலப் பிரபஞ்ச நாடகத்தில் உடம்பினுல் ஆண் என்றும் பெண் என்றும் தோற்றம் அமைகிறது. உண்மையில் உயிர்க் கூட்டம் அத்தனையும் பெண்மை உடையவர்களே. உடலால் ஆண் போலவும் பெண் போலவும் இருந்தாலும் உயிரால் பெண்களே. அனைவருக்கும் நாயகனக இருப் பவன் ஒருவன். அவன் ஒருவன்தான் ஆண் மகன்.

நாம் எல்லாம் புருஷ வேஷம் போட்டுக் கொண் டவர்கள். உண்மையில் இறைவன் ஒருவன்தான் புருஷன். அவனேயே புருஷன், புருஷன் என்று வேதம் சொல்கிறது. புருஷ வேஷம் உடம்பால் தரித்துக்கொண்டு காம் புருஷர் என்று சொல்லிக்கொண்டு நம்மாலேதான் எல்லாம் ஆகின்றன என்று சொல்கிருேம் அல்லவா? உண்மையான அரசன் ஒருவன் இருக்க, வேறு ஒருவன் அவனுடைய