பக்கம்:அன்பின் உருவம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மானப் பாட்டு 75

முடியையும் மற்றவற்றையும் புனேந்துகொண்டு கான்தான் அரசன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவனே நல்ல வன் என்று சொல்லுவோமா? அவனே அதமன் என்று சொல்வோம். அப்படி வேஷம் புனேந்து அதையே மெய், யென்று சாதிக்கும் நாம் அதமர்கள். உண்மையான புருஷ லும் உத்தமனுமாக இருப்பவன் இன்றவன் ஒருவனே. அத ஞல் அவனைப் புருஷோத்தமன் என்று சொல்கிருர்கள்.

பசுவாகிய பெண்ணுக்குப் பதியாகிய இறைவன் நாயகன். நாடகத்திலும் கதைகளிலும், பிராண நாயகரே! என்ற தொடர் அதிகமாக அடிபடுகிறது. யார் பிராண ஆணுக்கு 5ாயகர் என்று அறியாமல் பேசுகிறது. அது. பிராண கிைய நாயகிக்கு நாயகன் கடவுள். அவன்தான் உண்மை யான பிராண நாயகன். பிராணன் அல்லது உயிருக்கு ஆத்மா என்பது ஒரு பெயர். ஆத்மா காயகி, அதற்கு நாதன் இறைவன். தான் ஆத்மாக்களுக் கெல்லாம் நாதன் என்பதை கினைப்பூட்டுகிருன் திருப்பெருந்துறையில் எழுங் தருளியிருக்கும் ஆத்மநாதப் பெருமான். பசுவாகிய நாயகிக்கு நான் பதி என்று சொல்விக் கொண்டிருக்கிருன். அந்தத் தலம் அவனுடைய மணவாளக் கோலத்தை, பிராணநாயகியை ஆட்கொள்ளும் உரிமையை, புலப் படுத்தும் இடம். ஆதலால் அங்கே மாணிக்கவாசக காயகிக்குக் கல்யாணம் நடைபெற்றது. இதில் எவ்வளவு பொருத்தம் இருக்கிறது!

திருமணம் ஆகிவிட்டது. மணிவாசக நாயகி தன் நாதனேக் கண்டுகொண்டு அவனல் ஆட்கொள்ளப் பெற். ருள். இன்னும் குடித்தனம் வைக்கவில்லை. எப்போதும் அவனேயே நினைந்து கொண்டிருக்கிருள். வேலை செய் தாலும் விளையாடினலும் அவன் கினைப்புத்தான்; அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/81&oldid=535503" இலிருந்து மீள்விக்கப்பட்டது