பக்கம்:அன்பின் உருவம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*76 அன்பின் உதவம்

பேச்சுத்தான். எப்படியாவது ஒரு சம்பக்கத்தைக் கொண்டு வந்து அவனேப் பற்றிப் பேசுவாள். புதிதாகக் கல்யாண மான பெண்களுக்கு இது இயல்புதானே?

' இன்று அம்மானை ஆடலாம்: வாருங்கள் ” என்று தன் தோழியர்களே அழைக்கிருள் காதலி. தன் காதலனுடைய பெருமைகளைக் கண்டவர்களோடு பேச காணமாக இருக்கும். உள்ளம் கலந்து பழகுகிற தோழி களோடு விரித்து விரித்துச் சொல்லலாம்.

அம்மானே விளையாட்டு நடைபெறுகிறது. மூன்று அம்மானேக் காய்களை வைத்துக்கொண்டு மேலே போட்டும் கையால் பிடித்தும் அம்மானையை ஆடுவார்கள். பெரும் பாலும் மூன்று பெண்கள் சேர்ந்து விளையாடும் ஆட்டம் இது. அதல்ை மூவர் அம்மானே என்றும் ஒரு பேர் இதற்கு வழங்கும். மணிவாசக நாயகி தன் காதலனுடைய பெருமை களேப் பாடி ஆடுகிருள். மற்றவர்களும் பாடி ஆடுவார்கள். ஆனல் அவர்களுக்கு ஆட்டங்தான் முக்கியம்; பாட்டு அதற்கு அடுத்தபடியுள்ளதுதான். இங்கோ ஆட்டத்தை விடப் பாட்டுத்தான் முக்கியம்.

மணிவாசகர் ஆட்டத்தை வெறும் பாவனையில்

தான் ஆடினர். ஆனல் பாட்டை மாத்திரம் உண்மை யாகவே பாடிவிட்டார். ஒரு நாடகத்தில் ஒருவன் பலபல செய்கைகளைச் செய்கிருன். அரசனேப் போல. வேஷம் போடுகிருன். அருகில் நிற்கும் சேவகன மிரட்டுகிருன் நடுவில் அவன் கொடுக்கும் பாலேக் குடிக் கிருன். ஆட்டமெல்லாம் முடிந்துவிட்டது. அவன் அரச துக்குரிய உடைகளேக் கழற்றி விடுகிருன், அவன் கடித்த போது செய்த செயல்கள் யாவும் வெறும் கடிப்பு: உண்மை அல்ல. ஆனல் பால் குடித்ததோ, நடிப்போடு சேர்ந்த ஒன்று ஆலுைம் அது உண்மையாகவும் ஆகிவிட்டது: அவன்நாடகத்துக்காகக் குடித்தாலும் குடித்த பால் பொய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/82&oldid=535504" இலிருந்து மீள்விக்கப்பட்டது