பக்கம்:அன்பின் உருவம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8C - அன்பின் உருவம்

மணிவாசகர் சிறந்த கவிஞர். அவர் அழகுப் பிழம்பான பெருமானைப் பாடும் பாட்டில் அழகிய காட்சியை நிறுவிக் காட்டுகிருர்,

உலகத்தில் உள்ள அழகற்ற பொருள்களே கம்மால் மாற்ற முடியாது. ஆனல் கற்பனையால் நம்முடைய உள் ளத்திலே படைக்கும் பொருள்களேயெல்லாம் அழகழகாகப் படைக்கலாம்; நம்முடைய விருப்பத்துக்கேற்ற வண்ணம் இனிமையாகப் படைத்துக் கொள்ளலாம். ஆனல் அப்படிப் படைத்துக்கொள்வதற்கும் ஒரு பண்பு வேண் டும். அழகற்ற பொருள்களேக் கண்டு கண்டு அந்த வாசனையினலே, திடீரென்று கற்பனை செய்யப் புகுந்தால் அழகற்ற பொருள்களே கமக்கு முன் வந்து கிற்கும். ம்ே கண்ணே மூடிக் கொண்டால் இருட்டுத்தானே தெரிகிறது? இன்பமும் அழகும் அமைதியும் உள்ளவற்றையே கினைத்துப் பார்க்கப் பயிற்சி வேண்டும்; தெம்பு வேண்டும். அது நமக்கு இருப்பதில்லே. கவிஞர்களுக்கும் கலைஞர் களுக்கும் பக்தர்களுக்கும் அந்தத் தெம்பு இருக்கிறது.

மணிவாசகர் அந்தத் தெம்பு உடையவர். கற்பனே யிலே அழகிய பொருள்களைக் காணும் ஆற்றல் பெற்றவர். அகக் கண் மூலம் கடவுளையே கானும் திறமுடையவர். அவர் கற்பனையில் அம்மான ஆடு கிருர், அழகான பொருள்களை யெல்லாம் தொகுத்து வைத்து ஆடுகிருர். அழகிய தோழிகளே உட்கார வைக்கிருர். அவர்கள் தம் கைங்றைய வளைகளே அணிந்து. காதில் குழை பூண்டு விளங்குகிறர்கள். குழலில் மலர்கள் மணக்கின்றன. அவை வாடிய மலர்கள் அல்ல; தேனைச் சொரியும் பூக்கள். தேன் அவற்றிலிருந்து ஊற ஊற வண்டுகள் அவற்றில் வந்து மொய்க்கின்றன. தேனே உண்டு பாடுகின்றன. அழகான கற்பனை அல்லவா? கற்பனையில் பொருத்தமும் அழகும் இருந்தால்தான் நம்