அம்மானேப் பாட்டு 83
செய்யானே வெண்ணிறு அணிந்தானேச் சேர்ந்தறியாக் கையானே.
எல்லோருடைய கைகளேயும் குவிக்கப் பண்ணித் தன் கைகளை மாத்திரம் மலர்த்தி வைத்திருக்கின்ற பெருமான் அவன். வருவார் யாவரும் தன் முன்னே கின்று இரங்து, "எனக்கு என்று ஒரு செயல் இல்லே என்று கை இரண்டை யும் குவித்துக் கும்பிட, ஆண்டவன் நான் தருகிறேன், தரு கிறேன் என்று இரண்டு கையையும் மலர்த்திக் காட்டு கிருன், ஒரு கையாலே திருவடியைக் காட்டி ஒரு கையாலே அஞ்சல் என்று காட்டுகிருன். அந்தக் கைகள் குவிவதே இல்லை.
★
அம்மானைப் பாட்டுப் பாடும் பெண்கள் மணிவாசக நாயகியோடு சேர்ந்து பாடுகிருர்கள். அந்தப் பாட்டில் தங்கள் ஆருயிர்த்தலைவனப் பற்றிப் பாடுகிருர்கள். அவன். அழகன், ஆற்றலுள்ள தலைவன் என்று சொன்னர்கள். அவன் எங்கே இருக்கிருன்? அதைத் தெளிந்துகொள்ள வேண்டாமா? - . . . . -
"அவன் எல்லா இடங்களுக்கும் சொந்தக்காரன். அவனே எல்லா இடங்களிலும் காணலாம்."
"கான் கண்டதில்லையே! நான் பார்க்கும் இடங்களி லெல்லாம் கூட அவன் இருக்கிருன?” - -
'இருக்கிருன். ஆனல் எல்லா இடங்களிலும் அவனே எளிதில் காணமுடியாது.”
“எங்கும் அவன் இருக்கிருன் என்ருல் அவனே ஏன் காணமுடியாது?’ - -