பக்கம்:அன்பின் உருவம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பின் உருவம்

3

கூர்ந்து கவனித்தார். மயிர்க்கால்களையே கவனித்தார்.ரோமங்கள் குத்திட்டு நின்றன. சிவீர் சிலீர் என்று அடிக்கடி மயிர்க்கூச்சிடுவதை அவர் கண்டார். அது மாத்திரம் அன்று. அவர் உடம்பில் சிறு நடுக்கமும் உண்டாகியிருந்தது. பக்கத்திலிருந்த வேறு சிலரைக் கண்டார். அவர்கள் கொழு கொழுவென்று பருத்த மேனியுடையவர்களாக இருந்தார்கள். ஆனல் அவர்களுடைய மேனியில் இந்தப் புளகம் உண்டாகவில்லை. மெலிவாக இருந்த பக்தர் மெய்தான் அரும்பியது; விதிர் விதிர்த்தது.

இளைஞர் மீட்டும் முதியவரிடம் வந்தார். “நீங்கள் சொன்னபடியே சென்று பார்த்தேன். அவருக்கு அடிக்கடி மயிர்க்கூச்சு ஏற்படுகிறது; உடம்பு நடுங்குகிறது”

"எல்லோரிடமும் இந்த இரண்டும் இருக்கின்றன. என்று நினைக்கிறாயா?"

'இல்லை. அருகில் இருந்த சிலரைப் பார்த்தேன். அவர்களிடம் இந்த வெளியீடுகளைக் காணவில்லை.” - 'இப்பொழுது வேற்றுமை தெரிகிறதா? இவ்வளவு கூட்டத்திலும் உண்மையான அன்பர் சிலரே இருக்கிறாா்கள் என்ற உண்மை தெரிகிறதா?” -

இளைஞர் விடை சொல்லாமல் நின்றார். இன்னும் அவருக்கு முழுத் தெளிவு உண்டாகவில்லை. - 'அழகும் அன்பும் உடைய காளை ஒருத்தனிடம் காதல் கொண்ட மங்கை ஒருத்திக்குப் பல வகையான அனுபவங்கள் அந்தக் காதல் உணர்ச்சியினாலே உண்டாகும். தன் காதலனை நினைக்கும்போது உடம்பில் மயிர்க்கூச்செறியும், காதலனைக் காணும்படி நேர்ந்தால் குபீர் குபீர் என்று புளகம் போர்க்கும். உடம்பில் சிறு நடுக்கமும் காணும். உடம்பில் உள்ள உறுப்புகளெல்லாம் முறுக்குத்