86 அன்பின் உதவம்
விட்டால் அவன் எல்லோருக்கும் தலைவன் என்ற பெய ருக்கு ஏற்றவன் ஆக முடியாதே! -
ஆதலின், அவன் மற்றவர்களேயும் ஆட்கொள்ள வேண்டி அங்கங்கே திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கிருன்.
女 'என் காதலன் எங்கும் இருப்பான் என்கிருயே. அவனே கான் காணும் திட்டமான விலாசம் ஒன்றும் இல்லையா?”
"எல்லாருமே ஒருவாறு கண்டு தம் மரியாதையைக் காட்டச் சில இடங்கள் உண்டு.”
'அவற்றில் ஒன்றைச் சொல்; கேட்கலாம்.” 'அவன் திருவையாறு என்ற இடத்தில் யாவரும் காண எழுங்தருளி யிருக்கிருன். அங்கே விருப்பத்தோடு, சாமானிய மக்களையும் ஆட்கொள்ளும் பொருட்டு அமர்க் திருக்கிருன்.”
ஐயாறு அமர்ந்தானே.
女。
இத்தனை வகையாக எம்பெருமான் பெருமையை விரித்துச் சொல்லி, 'இவனைப் பாடி காம் அம்மானே ஆடு வோம்” என்று மணிவாசக நாயகி பாடுகிருள்.
கையார் வளேசிலம்பக் காதார் குழைஆட மையார் குழல்புரளத் தேன்பாய வண்டுஒலிப்பச் z செய்யான வெண்ணிறு அணிந்தானைச் சேர்ந்தறியாக் கையாண் எங்கும் செறிந்தானே அன்பர்க்கு 3. மெய்யானே. அல்லாதார்க்கு அல்லாத வேதியன ஐயாறு அமர்த்தானப் பாடுதுங்காண் அம்மாய்ை!