பக்கம்:அன்பின் உருவம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மாண்ப் பாட்டு 87

(கையில் உள்ள வளைகள் ஒலிக்க, காகில் உள்ள குழைகள் ஆட, கருமை நிறைந்த கூந்தல் புரள, தேன் பாய, வண்டுகள் ரீங் காரம் செய்ய, செந்நிறம் உடையவனே, வெள்ளிய திருநீற்றை அணிந்தவனே, கும்பிடும் பொருட்டு ஒன்றேடு ஒன்று சேர்ந்தறியாத கைகளை உடையவனே, எவ்விடத்தும் கிறைந்திருப்பவனே, அன்பர் களுக்குச் சத்தியப் பொருளாக இருப்பவனே, அன்பரல்லாதவர் களுக்கு மெய்யன் அல்லாதவனே, வேதப்பொருளாக இருப்பவனே, கிருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே நாம் பாடுவோம். - - -

ஆர் - நிறைந்துள்ள. சிலம்ப ஒலிக்க. குழை - காதணி. மை - கருமை. செய்யானே சிவப்புகிற முடையவனே. பவளம் போல் மேனியிற் பால்வெண்ணிறும்” என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறர். செறிந்தானே பொருந்தி யிருந்தவனே, ஓரிடத்திலும் இல்லை என்று சொல்ல இயலாமல் நெருங்கி யிருந்தவனே. அல்லா தார் - அன்பர் அல்லாதவர். அல்லாத மெய்யன் அல்லாத, வேகியன - வேதப் பொருளாக இருப்பவனே. ஐயாறு - சோழ நாட்டில் காவிரிக்கரையில் உள்ள கிருவையாறு என்னும் தலம். இங்கே சுவாமி பெயர் செம்பொற் சோகி, பிரணதார்த்திஹரர் என்பன. பாடுதும் - பாடுவோம்; தோழிமாரைப் பார்த்துச் சொல்வதால் பன்மையாகக் கூறினர். காண் அசை நிலை. அம் மானுப்: அம்மானே என்பதன் விளி. அம்மானையைப் பார்த்துச் சொல்வதுபோல அமைந்தது. அம்மானைப் பாட்டு அம்மானே என்றும், அம்மானுய் என்றும் முடிவது மரபு. அம்மானே என்று முடிவதே பெரும்பான்மை) .

இது திருவம்மானே என்ற பகுதியில் உள்ள பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/93&oldid=535515" இலிருந்து மீள்விக்கப்பட்டது