இதுபோல் உண்டா?
தில்லை நடராஜப் பெருமானிடத்தில் பேரன்பு உடைய வன் ஒருவன் ஓர் அழகியை ஒரு பூஞ்சோலேயில் கண்டான்: கண்டு காதல் கொண்டான். அவ்விருவரும் தனிமையிலே இருக்கும்போது, அந்தக் காதல் அமைந்தது. காதலினல் பெறும் இன்பத்தைக் கண்டார்கள். இதைக் களவுக் காதல் என்று சொல்வார்கள். மணம் புரிவதற்கு முன்பே இறைவன் திருவருள் கூட்ட, காதலர் ஒருவரை ஒன்று கண்டு உள்ளம் ஒன்றுவார்கள்.
காதலியைக் காணுங் தோறும் காதலனுக்கு உண்டா கும் வியப்பு அளவுக்கு அடங்காமல் இருக்கிறது. அவ ளுடைய பேரழகை கினேந்து கினேந்து பூரிப்பு அடைக் தான். அந்த அழகைப் பாராட்டிப் பேசவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. நல்ல அன்புடையவரை அவருக்கு முன்பே பாராட்டுவது அவ்வளவு உசிதமான காரியம் அன்று. காதலியை நேருக்கு நேராகப் பாராட்டுவது என்ருல் காணம் மிக்க அவள் கூசுவாள். ஆதலின் அந்தப் புகழை மறைமுகமாகச் சொல்ல ஆரம்பிக்கிருன். அவளைப் பார்த்து, பெண்ணே, நீ பேரழகி" என்று சொல்லவில்லை. அங்கே உள்ள வண்டுகளைப் பார்த்துப் பேசுகிருன்.
. ★ பூஞ்சோலை அல்லவா? அந்தச் சோலேயில் பறந்து கொண்டு வருகின்றன. வண்டுகள். அவற்றைப் பார்த்துப் பேசுகிருன். வண்டுக்கு மலரைப் பற்றிய அறிவு கிரம்ப இருக்கும். எல்லா வகையான மலர்களேயும் கண்டு கண்டு, ... . அவற்றின் மணத்தை அறிந்து அவற்றிலுள்ள தேனே நுகர்ந்து இன்புற்று இருக்கும் வழக்கம் உடையது வண்டு