இதுபோல் உண்டா? 9 i.
டிருப்பதனல், அவர்களுக்குக் கணக்தோறும் இனி எப்படி வாழ்வோம் என்ற வாட்டம் இருக்கும். -
இறைவனைப் பாடாத வாயுடையார், இறைவனேக் கருதாத நெஞ்சு உடையார் வாழ்க்கையில் மிகமிகத் தேம்பி வருந்துவார்கள். அவர்கள் வருந்துவதுபோல் காதலியினுடைய இடை மெலிந்திருக்கிறதாம். இடை யின் மெலிவுக்கு ஆண்டவன் அன்பைப் பெருதவர்களின் மெலிவை உதாரணமாகச் சொல்கிருன். காதலியினுடைய இடையைச் சுட்டிக் காட்டி ஆரம்பிக்கிருன். ஆளுல் அவ னுடைய கினேவு இடையைப் பற்றியது மாத்திரம் அல்ல : இறைவனேயும் பற்றியது.
女
பிறகு அவளுடைய அழகில் ஒன்றை எடுத்துக் காட்டுகிருன். அவன் நுகர்ந்த இன்பத்தில் ஒன்று அவளு டைய இதழ் ஊறலைச் சுவைத்தது. அந்த இதழின் மணத்தை அவன் நெருங்கி உணர்ந்தான். 5ெருங்காதவர் களுக்கு அவளுடைய வாய் ஆம்பலேப் போலத் தோற்றும்: ஆம்பலின் வண்ணம் மாத்திரம் தோற்றும், ஆல்ை ஆம்ப லின் மணம் தோற்ருது. இங்கே அவன் நெருங்கிக் காத லின்பத்தைத் துய்த்தவன். ஆகையில்ை, அவளுடைய இதழின் மணம் தெரிகிறது. அந்த மணத்தை வேறு எங்கும் காணமுடியாது என்று அவன் உறுதியாக நினைக் கிருன். சேய்மையிலிருந்து கண்டால் இவள் இதழ் ஆம்பலைப் போல்த் தோன்றுகிறது. ஆனல் இதன் பெருமை ஆம்பலுக்கு வருமா? ஆம்பலின் மணம் எதற்கு ஆயிற்று? இவள் இதழின் மணம் எந்த ஆம்பலுக்கு வரும் ? என்று எண்ணுகிருன்,
வண்டுகளைப் பார்த்துக் கேட்கிருன் : "இவளுடைய கணிச் சுவை பொருந்திய வாய் இருக்கிறதே. இதைப்