பக்கம்:அன்பின் உருவம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுபோல் உண்டா? 93.

கினை வு இல்லை; உபமானம் இல்லாத மணம் பொருந்திய வாய் என்று சொல்லவேண்டும் என்பதுதான் அவனுடைய நோக்கம்.

'நீங்கள் பயிலுகின்ற அகன்ற மருத நிலத்திலே எத்தனையோ ஆம்பல் மலர்கள் பூத்துக் கிடக்கின்றனவே! அந்த ஆம்பல் மலர்களுக்குள்ளே இவளுடைய வாய், போன்ற நறுமணத்தை உடைய ஆம்பல் எங்கேயாவது: இருக்கிறதா? நீங்கள் கண்டீர்களா? ' என்று கேட்கிருன்.

தேம்பலஞ் சிற்றிடை ஈங்கு இவள்

திங்கனி வாய்கமழும் ஆம்பலம் போதுஉள வோஅளி காள்தும்

அகன்பணேயே?

உள்ளத்தில் தலைவியினுடைய காதல் ஒடும்பொழுது இறைவனுடைய அன்பும் உடன் சேர்க்து திகழ்கிறது. அவளுடைய அழகுக்கு உவமை சொல்லும்போது முதற் கண் இறைவனுடைய கினேவு வருகிறது. பின்னே தான் கேள்வி வருகிறது.

இந்த நிகழ்ச்சி குறிஞ்சி கிலத்தில் நிகழ்வது. மலேயும் மலேயைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி கிலம், மலேச்சாரற். சோலையில் காதலனும் காதலியும் சந்தித்தார்கள். அவ. ளுடைய அழகைப் பாராட்டிச் சொல்லுகிருன் காதலன். சான்ருக வண்டுகளே அழைத்துப் பேசுகிருன். அந்த வண்டுகள் குறிஞ்சி நிலத்து வண்டுகள் அல்ல; மருத நிலத்திலிருந்து வந்தவை. ஆம்பலப் பற்றிய உண்மை. அவற்றிற்குத்தான் தெரியும். மருத நிலத்தில் உள்ள வண்டுகள், இந்தக் குறிஞ்சி கிலத்துக்கு வந்ததைப் போலக் குறிஞ்சி கிலத்து வண்டுகள் மருத கிலத்துக்குப் போய் அங்குள்ள ஆம்பல் மலர்களில் மொய்த்து அவற்றின் மணத்தைக் கண்டிருக்குமே ; அவற்றைக் கேட்டிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/99&oldid=535521" இலிருந்து மீள்விக்கப்பட்டது