பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§


பின் கட்டில் தனித்திருந்த வேர்களுக்கு எது வேண்டு பானாலும் பேசிவிட முடியாதல்லவா ? எனவே அப் போதைய உரையாடலுக்கு முற்றுப்புள்ளியிட எண்ணிய மேகலை ஸ்டுலில் கிடந்த புத்தகத்தைப் புரட்டினாள்.


எஸ்.எஸ்.எல்.ஸி பரிட்சைக்குப் படித்தது,


g


f


மெளனம் பொல்லாதது. ஆகவே மேகலையை அண்டிய சிந்தாமணி அளிடம் காதோடு காது சேர்த்து ரகசியம் ஒன்றை வெளியிட்டாள். மறுகணம் மேகலையின் அழகு முகப்பரப்பில் நாணம் கண் திறந்தது. முத்துப் பற்கள் முத்து நகை சிந்தின. ‘போ, சிந்தாமணி.நீ என்னை கேலி பண்ணுகிறாய்.”


முப்பழமும் சோறும் தலை வாழை இலையில் பரிமாறப் பட்டிருந்தன. மாப்பிள்ளைக் கோலம் மெருகிட, மாமல்லன் சம்மணம் கோலி உட்கார்ந்திருந்தான். மெட்டி மெட்டு இசைக்கக் கேட்டான், கண்டான், வளர்பிறையை ‘தன்னக்கட்டி’ப் போய்வரச் சொன்னான் அவன். பிற்பாடு தான் மேகலையை கண் கூட்டுக்குள் பிடித்துப் போட மனம் இசைந்தது. மேகலைதானா அவள் மைதவழ் விழிகளிலே மதர்ப்பு. மெய் விளையாடும் உள் ளத்திலே இன்ப வேதனை. பண் அமைத்த வாய் மடலில் பணி சேர்த்த சுவை. தாலிக் கூறை. முகூர்த்த ரவிக்கை, நெற்றியில் திலகம் அணி செய் நகைகள், அந்தம் பதிந்த அலங்காரம் ஆமாம் மேகலையே தான் !


வெண்ணெய் உருகினால்தான் மணக்கும். ஆனால் மேகலையோ நினைவிலும் உருவிலும் மணம் பரப்பினாள்!


நெய்யும் கையுமாக வந்தான் பூவை, சுடு சோற்றில் உருகின நெய் ஓடியபோது, மேகலையின் கை இனித்தது. சொம்புத்தேன்! அவள் அவனை விழி உயர்த்தி நோக்க நாணினாள். அவனுக்கும் வெட்கம் ‘கட்டுச் சோறு