பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9i


கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தது. தென்றல் சுமந்த இதயத்தில் புலம்பு முத்து தென்பட்டது. திருமாறனின் “உருத்தெரியா உருவம் தென்பட்டது. மேகலையின் மார்பகத்தில் தாலியுடன் கொஞ்சியது வைர அட்டிகை அவனுடைய இடது கை விரலொன்றில் வைர மோதிரம் பிரகாசித்தது. சில நாட்களுக்கு முன் அவனுக்கு வந்த திருமாறனின் பதிவுக் கடிதம் தெரிந்தது.


‘அன்பு மிகுந்த உயிர்த் தோழன் மாமல்லனுக்கு, திருமாறனை உனக்குப் பிடிக்காத நாட்கள் சமீபத்தில் இருந்திருக்கலாம். ஆனால் என்றென்றும் நீ என் உயிர் போன்றவன். அன்புக்கும் நட்புக்கும் மதிப்பு:கொடுப்பதுடன் நிற்பவனல்ல. நான், அவை இரண்டையும் இணைத்து சோதனை செய்து பார்க்கும் தனி மனிதன் நான், பைத்தியக்காரன் என்று சொல்லும் உலகம்.


‘மாமல்லன், என்னை நீ நம்பு ! உன்னுடைய பாவை மேகலை என்பதை சிந்தாமணி மூலம் கேள்விப்பட்ட மறுகணமே, என் நெஞ்சிலிருந்து மேகலையை இறக்கி விட்டேன், அழைப்பிதழில் என் பெயர் இருக்கும் இடத்தில் உன் பெயர் அழகு காட்டச் செய்தேன். தியாகத்தை கதைகளிலே, சினிமாப் படங்களிலே மட்டுந்தான் நான் சந்தித்திருக்கின்றேன். இன்று அந்தத் தியாகத்தை நிதர்சனமாக உணரவும், உணர்த்தவும் முடிந்திருக்கிறது.


என் பெயருக்கு உள்ள நிதிக்குப் பயன் கிடைக்க வேண்டுமல்லவா? வைர அட்டிகை ஒன்று தொடர்கிறது. இது என் அண்ணியார் திருமதி மேகலை அவர்களுக்கு மைத்துனனின் பரிசை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது ஜாக்கிரதை ! அண்ணனுக்கும் ஒரு பரிசு கிடைக்கும். தோழனைவிட அண்ணனாக நீ அமைவதில் தான் எனக்கு ஆனந்தம்.