பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


95


9


இரண்டு, மூன்று வினாடி நேரம் மாமல்லன் வாயடைத்துப் போனான். நல்ல மூச்சு வந்தவுடன்: “சிந்தாமணி, உன் அத்தானைக் குளித்து முழுகச் சொல், பலகாரம் சாப்பிட்டு விட்டு அப்புறம் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசலாம்!” என்று தெரிவித்தான்.


காலைப் பலகாரம் முடிந்தது. மாமல்லன் காப்பித் தம்ளரைக் கீழே வைக்கப் போனான், அதற்குள் மேகலை ஓடிவந்து அதை வாங்கிக் கொண்டாள் குறிச்சியில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் சூன்யவெளியில் பாதிப் பார்வையையும், சூடுபறந்த காப்பியில் கால்வாசிக் கண்ணோட்டத்தையும் பதித்தவாறு இருந்தான். எஞ்சிய திருஷ்டி மிஞ்சிய காப்பியில் நிலைத்து விட்டது.


‘காப்பியைக் குடியுங்க ‘ என்றாள் சிந்தாமணி.


அவன் மடக் மடக் கென்று ஒரே மூச்சில் குடித்து முடித்தான். தம்ளரை வாங்க இவள் கையேந்தினாள். அவனுடைய கண்கள் இரண்டும் சிந்தாமணியையும் மாமல்லனையும் கூறு போட்டுக் கொண்டிருந்தன,


கண் முன் காணப்பட்ட காட்சியில் கருத்து வைத்த வண்ணம் எட்டி நின்று பார்வையை எட்டவிட்டுக் கொண்டிருந்தாள் மேகலை அவளுக்கு அருகில் கோசலை அம்மாள் நின்றாள்


புதிய யுவன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்தெழுந் தான், பிரயாணப்பை கக்கத்துக்குத் தாவிற்று.


மாமல்லன் எழுந்தான். எழுந்து முன்னே நடந்தான். சில நிமிஷப் பொழுதுக்கு முன்னதாக சிந்தாமணி விரைந்து வந்து தன்னிடம் கூறிய வார்த்தைகள் சிலிர்த்தெழத் தொடங்கின. இந்த குலோத்துங்கன் சிந்தாமணிக்கு