பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தான். மாமல்லனுக்கு ஏதோ ஞாபகம் கிளர்ந் தெழுந்தது. வெட்கம் வந்து சேர்ந்தது.

‘மேகலை அடுத்த வாரம் நாம் பட்டணத்துக்கு புறப்படுகிறோம்

இது கடிதம் ;

“... உன் அன்புக் கடிதம் என் கண்களில் ஆனந்தக் கண்ணிரை வரவழைத்தது. என் பாக்கியம் பலனுள்ளது. உங்கள் இருவருக்கும் என் விருந்து காத்திருத்கிறது. அது போல, நீயும் எனக்கு விருந்து வைக்க வேண்டாமா ? இந்த வாய்ப்பு கூட உன் கையில் தான் இருக்கிறது. சிந்தாமணி திருமாறனாக முடியுமல்லவா ?


திருமாறன்,’ அவனுக்கு இக்கடிதம் அதிர்ச்சி தந்தது. காரில் விஜயம் செய்த திருமாறனின் போக்கையும் சமீபத்தில் அவன் அனுப்பி வைத்த தங்கப் பரிசுகளையும், இப்போது அவன் முன் வைத்துள்ள .ே கா ரி க் ைக ைய யு ம் எண்ணலானான், இரண்டுங் கெட்டான் நிலையில் தவித்த மனம், அம்பிகையின் அருளை வேண்டினான்.


‘நல்லது, தீயது நமக்கெப்படித் தெரிய முடியும் ? எல்லாம் அன்னையின் கருத்துக்குளல்லவா புதைந்திருக் கிறது! கடவுளே, எனக்கு நல்ல வழி காட்டு என்று. பெருமூச் செறிந்தவாறு, மாமல்லன் எழுந்தான். குலோத்துங்கனுக்கு அருகாமையில் கிடந்த அவன் விரல்கள் விளையாடின. கோடுகள் உருவாக்கிய சித்திரங்களில் சில பலவாகிக் காணப்பட்டன. வகை வகையான பெண்கள் : கடைசியாக கிடைத்தது ஒரு நிழற் படம் ! கூர்ந்து நோக்கினான் மாமல்லன். பிஞ்சுப் பிராயத்து ஜோடி ஒன்று இருந்தது. குலோத்துங்கனை இனம் காண முடிந்தது. உடன் இருந்த சிறுமி அவன் முன் ஆல வட்டம் சுற்றினாள்.