பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“ஐயா, அந்தப் படத்தை தயவு செய்து என்னிடம் கொடுத்து விடமாட்டீர்களா ? அது என்னிடம் இருந்தால் தான், என் உயிர் உடம்பில் தரிக்கும்!”

  • ச்சீ !’ என்று உதுமினான், கைகளை ஓங்கினான் மாமல்லன். ஓங்கிய கைகள் இறங்குவதற்குள், அண்ணா!’ என்று கூச்சலிட்டு ஓடி வந்தாள் சிந்தாமணி.

செய்வதை அறியாமல் அப்படியே நின்றான் மாமல்லன். கண் சிமிட்டும் நேரம் மறைந்திருக்கும் உடனே அவன் தன் அறைக்குள் ஒடிச்சென்து கதவுகளைத் தாழிட்டு பத்திரமாக மூடிக்கொண்டான்.

விம்மல் ஒலி மட்டும் புறப்பட்டுக் கொண்டிருந்தது.

சோளியின் நிறம் கறுப்பு, நல்ல கறுப்பு, தன்மை பட்டு. அடையாளம் : சுற்றிலும் வெண் புள்ளிகளை இடைவிட்டு மையத்தில் வட்ட நிலாச் சித்திரங்கள் பின்னப்பட்டிருந்தன. வான மடந்தையும் மேகலையை ஒப்பத்தான் தோற்ற மளித்தாள், மாடிப்படிகளின் வரிசை எண்களில் அவள் கருத்து ஊன்றியிருந்தது, குங்குமப்பூ, பனங்கற்கண்டு, ஏலக் காய் ஆகியவற்றின் கூட்டுறவில் காய்ச்சப்பட்ட பசும்பால் வெள்ளிக் குவளையில் தயாராகயிருந்தது. ஆவி பறந்த பாலின் சூடு ஆறி விடாமலிருக்க, சின்னத் தட்டொன்று அதன் வாயை மூடியது. தாம்பூலப் பெட்டியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலைக்கோட்டை வெற்றிலைக் காம்பு ஒன்றைக் கிள்ளி எடுத்து இதழ்களுக்கு நடுவில் வைத்தாள் சாறு உறைத்தது. அவள் மாடியில் இருந் தாலும், அவளுக்குச் சொந்தமான உள்ளன் வினாடிக்கு வினாடி கீழ்த்தளத்திற்கு ஒடி ஒடித் திரும்பிற்று. என் அத்தான் மேலே வருவாங்க, இல்லியா ? ஏன்... வர மாட்டாங்க வருவாங்க, கட்டாயம் வருவாங்க ‘

இதயத்தின் முனையில் காத்திருத்த ரத்தத் துடிப்பு