பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 அவளுக்கு தேறுதல் தெரிவித்தது. காலைப் பொழுதில் நிகழ்ந்த சலனத்தப்பற்றி மறந்துவிட வேண்டுமென்று தான் அகன் பிரயத்தனப்பட்டாள். நினைவும் மறதியும் பால்குடி மாறாத சுைக்குழைந்தைகள். வருந்தி அழைந்தால் அழும்பு பண்ணி உற்றவர்களை வருந்தச் செய்வதில் அவற்றுக்கு ஓர் ஆனந்தம். நினைத்ததை மறந்தாள் மறந்ததை நினைத்தாள். 'நீ கீழே போயேன், மேகலை!. என்று பணித்த குரல் மறைந்தது, அவள் அரை குறையாகக் கண்ட அந்தப் புகைப் படத்தைப் பற்றின எண்ணச் சுடர் நின்று நிதானித்து எரியத் தொடங்கியது. 'கீழே விழுந்த சின்னப் படத்தை என்னை முந்திக் கொண்டு அத்தான் அவசரமாக எடுத்தாங்களே, என்ன படம் அது ?'-- இந்தக் கேள்வி பல கிளைகளாகப் பிரிந்தது. அத்தான் மனத்தில் விஷ விருட்சம் ஏதாவது முளைத்து விட்டிருக்குமோ என்று அவள் அஞ்சினாள். ஏதோ ஓர் இடைவெளி பள்ளம் பறித்து விட்டது போல் உள்ளுணர்வு அறிவுறுத்தியது. எழுதிச்செல்லும் விதியின் கையெழுத்தைப் புரிந்து கொள்ள இயலாமல் அவள் தவியாக தவித்துத் தண்ணீராக உருகினாள். மையிட்ட கண்களுக்கு மணிகள் வரம்பு சுட்டின சூலுண்ட மேகமென, ஆற்றாமை ஒன்றே அப்பொழுது அவள் வசம் மிஞ்சியிருந்தது. குலோத்துங்களின் உருவம் மனக் கண்ணில் தெரிந்தது. "யார் இந்த ஆள்?... தென்றலைச் சுமந்திருக்கும் அத்தானிடம் புயலைக் கிளப்பி விட்டாரே ?... கண்ணீரை மறைத்து, ஆனால் கவலை தோய்ந்த வதனத்தை மறைக்க மாட்டாமல் நடமாடிக் கொண்டிருந்த சிந்தாமணி தோன்றினாள். 'நேற்றைக்கு குலோத்துங்களை விரட்டியடிக்க முனைந்தப்போ, சிந்தாமணி வத்திராம லிருந்தா இந்நேரம் வீடு எவ்வளவோ கலகலப்பாயிருந் திருக்காதா?...தெய்வமே!.... என்று மேகலைக்கு ஓடியது.