பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# #2


நம்ப வேண்டியவள் நம்பினாள், நம்பமாட்டாதவன் நம்பவில்லை. உண்மையும் பொய்யும் இடம் மாற்றப் பட்ட, அல்லது கைமாறிய துருப்புச் சீட்டுகளாயின. வாழ்க்கைப் பாடலின் பொழிப்புரையும் இதுதானே ...?


வீட்ட குறையைத் தொட்டு முடித்துப் பூரணத்துவம் கொடுத்த பிறகு சித்திரத்தைப் பார்க்கும் ஓவியக்காரன் பூரித்துப் போவான். மாமல்லனும் அவ்வாறுதான் இருந் தான், எழுதி முடித்த கடிதத்தில் எக்காளச் சிரிப்புடன் மாமல்லன் விழி பதித்தான், பிள்ளையார் சுழிபோட்டு, *உயிருக்குயிரான தம்பி திருமாறனுக்கு என்று தொடங்கி யிருந்த கடிதத்தில் அவன் விரும்பிய சில வாக்கியங்கள் மாத்திரம் மறுமுறையும் அவன் பார்வைக்கு இலக்காயின,


‘என்னோடு உடன் பிறவாத தங்கை சிந்தாமணி, அவளுடைய எதிர்காலம் செம்மையுடன் இருக்க வழி வகை செய்ய வேண்டியது என் கடமையாகும். அந்தப் பிரச்னையில் நான் மூழ்கியிருக்கையில் உன்னிடமிருந்து தபால் வந்தது. சிந்தாமணி திருமதி மாறனாக ஆனதும் தான் எனக்கு இன் மூச்சு வரும். பங்களா வாசமும் பண்புள்ள உனது அன்பும் அவளுக்குப் பருவகால மழை யாக உதவும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. இன்று நீ எனக்குத் தக்பி என்னும் உறவு. இந்தச் சொந்த முறையில் மாற்றம் ஏற்பட்டு விடும். என் சகோதரியை உன் மனப் பீடத்தில் ஏற்றி வைக்கின்ற காலை நீ எனக்கு மைத்துனன் ஆகிவிடுவாய் அல்லவா ? இவ்வாரக் கடைசியில் உன்னைச் சந்திப்பேன்....!” -


நாழிகை வட்டத்தில் மணி பன்னிரண்டு,


மாமல்லன் கடிதத்தை மடித்து நீல உறைக்குள்


திரிைத்தான், முகவரி எழுதினான், சோற்றுப் பருக்கைகள் இரண்டு உறைக்குத் திரையிட்டன. அவன் மனம்