பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


} j9


“தருகிறேன். அத்தான், தருகிறேன் !’ என்று பதில் சொன்னாளே தவிர, அன்பளிப்பு எதையும் அவள் கொடுக்கவில்லை,


“பரிசு எப்போது கிடைக்கும் தேவி ?’ என்றான் மாமல்லன். .


“இன்றைக்குப் பதினேழாம் நாளில் கிடைக்கும் அத்தான் !”


எண்ணிக் கணித்துச் சொன்ன கெடு காற்றில் அசைந்தாடியது. ஆனால் அவளோ, அசைந்தாடிய பூங்கொடியாக உள்ளே ஒடி மறைந்து போனாள் நானத்தை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு.


ஒரு வினாடி கழிந்ததும் மாமல்லனுக்கு இருந்திருந்தாற் போல வெட்கம் வந்து விட்டது. அது எங்கள் முதலிரவு -நினைவு மீண்டதும் சிரித்தான் மாமல்லன்,


காலம் ஒடுகிறது. காலத்தின் கருவில் வளர்ந்து வெளிவந்த ச ம் ய வ ங் க ளு ம் அவற்றுடன் ஓடி விடு கின்றன. ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் மட்டும் அவற்றோடு ஒடிப்போய் விடுவதில்லை. அதிசயமான இவ்விளைவு தான் காலத்தின் மகிமை !


சென்னைக்கு வந்த மேகலை மின்னல் துவளும் நேரத்திற்குள் அரியலூர் சென்று திரும்பினாள். பழைய சிந்தனை அவளது சித்தம் முழுவதையும் இனிக்கச் செய்தது. அவள் திரும்பினாள், ஹாலில் மேஜை மீது இருந்த அரை வட்டக் கண்ணாடியொன்று அவள் எழில் மாற்றுரைத்துக் காட்டியது. நெற்றி மையத்தில் பிறை வடிவத்தில் குங்குமம் இருந்தது, சுருள் படிந்த கேசங்கள் சில பொட்டுக்கு திருஷ்டிக் கழித்துக் கொண்டிருந்தன. சோளியின் கழுத்துப் பக்க இடைவெளியில் தாலியின் தங்க