பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$22


மேகலை புத்துடைகளை மேனியில் போர்த்தினாள். கண்ணாடியில் தாலி பொட்டுத் தெரிந்தது, கண்களில் ஒற்றிக் கொண்டாள். மின்னும் நட்சத்திரங்கள் வைர அட்டிகையின் கண்களாகச் சேவை செய்தன. முன்னே பின் னே அறிந்திருக்காத, ஆனால் விட்டகுறை தொட்டகுறைதொட்ட குறையின் பலா பலனாக விளைந்த சம்பவம் அது. மாயலோகத்தைச் சார்ந்த பெரிய கோடீஸ்வரரின் திருக்குமாரனான திருமாறனை அவள் ஒரு முறையோ அல்லது இரண்டு தரமோதான் கண்டிருக்கிறாள்-அதுவும் அரியலூரில்-அவள் இல்லத்தில்! பாசபந்தம் எப்படியெப்படி யெல்லாமோ சூதாடப் பார்த்தது. அவளது மாங்கல்ய பாக்கியம் அவளுக்கும் திருமாறனுக்கும் பந்தத்தை உண்டு பண்ணவில்லை. ஆனால், பாசம் மட்டும் நிலைத்தது. திருமாறனின் அன்பையும் பாசத்தையும் அவளால் மறக்க முடியாது. ஏனென்றால், வைர அட்டிகை நெஞ்சோடு நெஞ்சாகத்தானே சதா விளையாடிக் கொண்டிருக்கும்!


திருமாறன் வந்து விட்டான்.


ஆடு துறை ஜவுளி வண்டி மாதிரி அவ்வளவு பெரியதாக, வும் நீளமாகவும் இருந்தது பிளிமத் கார், அவன் இறங்கி ாைன். நாலைந்து கனத்த காகித டப்பாக்களையும் பழக் கூடை ஒன்றையும் டிரைவர் ஒரே நடையில் சுமந்து போனான்.


வாசலில் காத்து நின்ற மாமல்லன் நண்பனை இன்முகம் காட்டி வரவேற்றான். கணவனின் நிழலைப் பிரிந்து நின்ற மேகலை வணக்கம் அண்ணா! வாருங்கள்.” என்று முகமன் மந்திரச் சொல் கேட்டு திருமாறனின் உடம்பு புல்லரித்தது, உதட்டுச் சிரிப்பு கண்களுக்கு தாவியது. விழிகளின் வெள்ளம் இதழ்க் கரையில் அலை மோதியது,


மாமல்லனுக்குக் கட்டு மீறிய ஆனந்தம்,