பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123



சிநேகிதனை வழி காட்டி அழைத்துச் சென்றான் அவன், “வாங்க, தம்பி!” என்றாள் மாமல்லனைப் பெற்றவள், மேகலையிடம் துரய புன்முறுவலையே பதிலாகத் தெரிவித்த மாதிரி, கோசலை அம்மாளுக்கும் பதில் சொல்ல அவன் இதழ்களில் சிரிப்பை வரவழைத்தான்,


நடையில் பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டு நெருடிக் கொண்டிருந்தான் திருமாறன்.


‘ மாறன், இது மாய மந்திர ஜமுக்காளம் அல்ல. பயப் படாதே ! எங்கேயும் பறந்து விடாது ஆமாம், டியன் சாப்பிடத் தயார் தானே?”


மாமல்லன் கேட்ட கேள்வியின் எதிரொலி தேய்ந்த போது, மேகலையின் சிரிப்போசை புதிதாகக் கேட்டது. பதியின் நகைச் சுவையை அனுபவிக்க வேண்டியவள் அவள். அவனுக்குத் தலை கொடுத்தவள் ஆயிற்றே!”


சாப்பிடுங்கள்!’


மேகலை உபசரித்தாள். ரவைக் கேசரி ஒரு தட்டிலும் ஒமப் பொடிக் கலவை இன்னொன்றிலும் இருந்தன தண்ணிரை ஒருமிடறு அருந்திய பின், மீண்டும் தலையைத் தரைக்கு தாழ்த்தினான்.


“மாமல்லன், நீ. சாப்பிடலையா ?”


‘முதலில் ருசி பார்த்ததே நான் தானே....?”


‘,ஏன், உனக்கு முன்னால் ஹோட்டலில் சுவைத்திருப் பார்களே ? ’’


“ஓஹோ, அப்படியானால் மேகலைக்கு இம்மாதிரிப் பலகாரம் செய்து பழக்கமில்லைன்னு நினைச்சிட்டியா ?