பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#25


“ஆ, !’


‘ஆகவே, மேகலை சொன்னபடி நீ அவளுடைய அண்ணனாகவே இருந்துவிடு அப்போதுதான் என் தங்கை சிந்தாமணியை உனக்குத் திருமணம் செய்து கொடுப்பேன்!”


“உத்தரவு மைத்துனரே, உத்தரவு...”


மேகலை’களுக்கென்று சிரித்தாள்.


திருமாறன் விடைபெற்றுத் திரும்பிக் காரில் ஏறிய போது, “அடுத்த மாதம் மஹாபலிபுரம் போவதாக


இருக்கிறோம், நீயும் வருகிறாயா ?’ என்று விசாரித்தான் மாமல்லன்.


‘உனக்குச் சொந்தமான பூமியாயிற்றே அது வருவ குச் சொல்ல வேறு வேண்டுமா !”


தற்


“ஓஹோ ). இப்போது பெரியவர் நரசிம்மவர்ம பல்லவரென்னும் மாமல்லச் சக்ரவர்த்திகளா ? ஹாம் !’


‘கலை வளர்த்த மன்னர்கள் இதுபோல நம் கனவு களையாவது வளர்க்கக் கற்றுத் தந்து சென்றிருக்கிறார் களே, அதுவே தமிழ்க் கலையின் அதிர்ஷ்டம் தான் !’ என்று சிரித்தபடி தொடர்ந்து, ‘நானே வண்டி எடுத்துக் கொண்டு இங்கே வந்து விடுகிறேன்’ என்று முடித்தான் திருமாறன்.


அஞ்சலியின் முத்திரைகள் ஒய்ந்தன.