உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133



என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினான் இதயக் கால்வாயை வெட்டிப் பாய்ந்து வந்த அன்பு வெள்ளம் அவனுடைய கண் வழியே வழிந்தது


மேகலை பாக்கியவதி !


தான் அடைந்த பேற்றுக்குரியவனை - தன் பாக்கியத்துக்கு விதை தூவியவனை ஆவல் குலுங்கப் பார்வையிட்டாள் மேகலை.


வான் முகட்டுக்கு ஒடிய கண்ணோட்டம் மண் மேட்டுக்கு நாடியுங்கூட மனம் அடங்காமற் போகவே, சூன்யப் பெருவெளியில் கண் இரண்டையும் காணிக்கை செலுத்தியிருந்தான் மாமல்லன், அத்தான்!” என்னும் உரிமைக் குரல் கேட்டுத் திரும்பினான். முகம் கறுத் திருந்தது, கண்கள் நனைந்திருந்தன. மேகலை அழைப் பதைக் கேட்டவுடன், அவள் அறியா வண்ண்ம் ஈரத்தைப் போக்கினான், இதயத்தின் ஈரத் தைச் சேர்த்தல்லவே.


நான் !”


יין. לי*


‘நான்’, ‘நீ என்கிற வார்த்தைகளுக்குத் துணை நின்று முடிவு பெறாத புள்ளிகள் சில உண்டாக்கிக் காட்டிக் கொண்டிருந்த பொருளை அவளும் அறிந்திருந்தாள், அவனுக்கும் அது புரிந்திருந்தது. அந்த இதயப் பரிவர்த்தனைக்கு அடையாளமாக இருஜோடி உதடுகள் மென்னகையும் இளமுறுவலையும் கோடிட்டுக் காட்டின.


திருமாறன் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றான் மாமல்லன் சரியென்று சொல்லி அவனை வழியனுப்பி வைக்க காருக்கு அருகில் சென்றான். திருமாறன் கை கூப்பி விடைபெற்ற சமயத்தில், புத்தம் புதிய நூறு ரூபாய்