பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34


நோட்டை அவனிடம் கொடுத்தான் மாமல்லன். தேவைப் படும் போது, நானே கேட்டு வாங்கிக் கொள்வேன்,


மாறன் !” என்றான்.


மாமல்லனை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந் தான் திருமாறன். காரின் உள்ளே பரவியிருந்த ஒளிக் கதிரிகள் மாமல்லனின் கண்களை தாக்கின. மாமல்லன் இந்தப் பணத்தை நீங்கள் வாங்கிக் கொண்டால்தான், நான் நிம்மதியாகத் துரங்குவேன் ‘- திருமாறன்.


“மாறன், நான் அமைதியாக உறங்க வேண்டுமானால், இத்தப் பணம் உங்கள் வசம் இருப்பதுதான் நல்லது ‘


மறுமொழி என்ன அறிவிப்பதென்று வகை தெரியாத வனாக திருமாறன் திண்டாடினான், ‘ம் . உங்கள் மனைவியை பத்திரமாகக் கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் எனக்கு செய்தி அனுப்புங்கள். போன் நம்பர் இதில் உள்ளது.’ என்று கூறி அச்சிட்ட துண்டுச் சீட்டு ஒன்றைக் கொடுத்தான்,


கார் புறப்படத் துடித்தது. ‘மாமல்லன் வருகிற திங்கள் கிழமை ஷூட்டிங் பார்க்க வரவேண்டும். மேகலை யையும் கட்டாயம் அழைத்து வாருங்கள் மறந்து விடக் கூடாது.'’ என்ற நினைவுக் கடிதத்தையும் எழுதி சமர்ப் பிக்க மறக்கவில்லை திருமாறன், -


கூப்பிய கரங்கள் நான்கும் இருட்டில் பிரிந்தன.


பூதலம் இருட்டறையில் ஊஞ்சலாடித் தவித்தது.


ஒளி ஏற்றும் தீபமாக நிகழ்ச்சிகள் சில மாமல்லனின் நெஞ்சத்தளத்தில் சுடர் சிந்திக் கொண்டிருந்தன. ஆனால்,


பரத்த வெளிச்சத்தைப் பறந்தோடச் செய்து விட்டன. பல சம்பவங்கள். மிஞ்சியது இங்கேயும் இருள்தானோ ?.