பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135



மாமல்லன் கண்களைத் துடைத்து விட்டு நிமிர்ந்து உட்காரலானான். சாமம். மனப்பளு மண்டையில் குந்தியது. ஆனால் ஒரு விசேஷம் என்னவென்றால், தலைப் பளுவும் இறங்கவில்லை, மனச்சுமையும் குறையவில்லை. தலைமயிரைப் பிய்த்துக் கொண்டான் அவன். அவனுடைய இத்தகைய போராட்டத்துக்குப் பயந்து அமைதியின் இதயம் திறந்து விடுமா, என்ன ?


மனமாலை இருந்தது, வெள்ளைச் சுவரில், மலர்மாலை கிடந்தது. பட்டு மெத்தையில் ! காதல் பூண்ட உள்ளங் களை கனவுலகில் சேர்த்து வைத்த பெருமை பூச்சரத்துக்கு. எண்ணம்போல தன் மணம் முழுதும் உரிய இடத்தில் அடைபட்டு அனுபவிக்கப்பட்டு வருகின்றதேயென்பது பேசும் பூமாலையின் கருத்து.


மாமல்லனை மையப் புள்ளியில் இருக்கச் செய்துவிட்டு, இருகோடியிலும் அமைந்திருந்த அந்தத் திருமண மாலையும் இந்த எழில் மலர் மாலையும் சேகரமாகச் சேர்ந்து அவனைப் பார்த்து எள்ளி நகையாடின. அவற்றின் நகைப் பொலியில் பயம் மலிந்த பேரதிர்ச்சிக் குரல் ஒன்றின் எதிரோசையைத்தான் அவனால் கேட்க முடிந்தது. அந்தச் சிரிப்பின் சித்திரத்தில் அவன் உருவம், குலோத்துங்கன் !


மூச்சு ஒடுங்கி விடாதா என்று ஏங்கிய நிலையில், உயிரோட்டம் அடங்கி விட்டது போன்ற நிலை அவனுக்கு உண்டாயிற்று. கண் புதைத்துச் சிலையானான். காரிருளும் காரிகையின் வடிவம் எங்கோ கைதட்டிக் கூப்பிட்டன. விழி திறந்த வழியில் அழகு ரோஜாவாக மேகலை கண் வளர்ந்து கொண்டிருந்தாள். ரோஜாப்பூவின் செந்நிறம் அவள் உதடுகளில் தஞ்சமடைந்தது. மூடிய அவளது கண்களில் லாவண்யம் ரோஜாவின் மலர்ச்சியில் கலந்தது. மணத்தில் போதை ஏறியது. நெடி அளவு