பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$38


காதலை உணராதவர்கள் ஏற்படுத்தும் முடிவுக்குப் பலியாகும் உள்ளங்களை நான் அறிவேன். நீ என். உயிர்த் துணைவி. நான் உனக்கு உரிமை கொடுக்கிறேன். நீ காதலித்த இளைஞனை இன்று சந்தித்திருக்கின்றாய் எனவே, மனம் விட்டு அவருடன் உரையாட நான் சம்மதம் அளிக்கிறேன். மனத்தில் உறுதிப் பண்பு இருக்கும் வரையில் எந்த மாயையும் என் கண்களைக் கட்ட முடியாது. நான் காதலித்த பெண்ணைக் காண நேர்ந் தால், அவளோடு அன்புடன் பேசி மகிழ்வேனல்லவா ? அது மாதிரித் தானே உனக்கும் மனம் துடிக்கும் ? பார்த்துப் பேசுவதில் தவறு ஏதுமே கிடையாது, மாலினி. பிறந்த காதலை கோடு கிழித்து அதனுள்ளே உலவச் செய்து வாழ விடுவதுதான் மனித தர்மம் ஆனால் தமிழ்ப் பண்பை மட்டும் நீங்கள் இருவரும் மறந்து போய் விடா தீர்கள். உன் நண்பருக்குக் காப்பிப் பலகாரம் கொடு நான் திரும்பி வந்ததும் எல்லோரும் ஒன்றாகவே உணவருந்துவோம்” என்ற பேச்சுக் கதம்பம் மாமல்லனின் ரத்தத்தை ஒன்று சேர்த்துச் சுண்ட செய்து தீ அழலை இருதயத்தில் ஏந்தி வைத்தவாறு துடியாய்த் துடித்தான்.


இரவின் துடிப்பில் இரு இருதயங்களின் துடிப்பும் இரண்டற கலந்தது !


அலுவலகத்தில் இயந்திரமாகி, வீட்டுக்கு மனிதனாக உருக் கொண்டு வந்து சேர்ந்த மாமல்லனிடம் கடித மொன்றை நீட்டினாள் மேகலை, யாருடைய கடிதத்தை அல்லும் பகலும் எதிர் நோக்கி கொண்டிருந்தானோ, அது அவன் எதிர்பாராத நேரம் நோக்கி வந்திருந்தது. சிந்தாமணி எழுதியிருந்தாள். முழு விலாசத்தையும் கொடுத் திருந்தாள். அக்கடிதத்தைப் படிப்பதற்குள், அவன் திரு மாறனுக்கு அளித்திருந்த உறுதிமொழி நினைவைச் சொடுக்கியது. திருமுகம் தந்த விளக்கம் ; குலோத்துங் கனுக்கு குணமாகி விட்டதாம், ஆனால் திடுதிப்பென்று