உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰7


பல் வகை மாண்பினிடையே - கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு ‘


குலோத்துங்கன் புத்தம் புதிய உருபுனைந்து தோன்றி னான், அவ்வாறு மாமில்லன் கருத்துத் தயாரித்தான்.


“வணக்கம்’ என்றான் குலோத்துங்கன்.


வணக்கம்!” என்று பதில் சொல்லி, படுக்கையிலிருந்து எழுந்தான் மாமல்லன். -


குலோத்துங்கனை அமருமாறு வேண்டினான், இருக்கை ஒன்றையும் சுட்டினான் இல்லத்துத் தலைவன்.


வெட்ட வெளியைச் சுற்றிச் சுற்றித் திரியும் ஒன்றைத் தனிப் பறவையைப் போல, குலோத்துங்கனின் விழிப் பார்வை வழி நடந்து, வழி மறித்து, வழி தவறி அலைந்து அல்லாடியது.


  • வணக்கம் !’


காற்றுக்கு அழுத்தச் சக்தி அதிகம் என்பார்கள். அந்தக் காற்றினால், வணக்கம் என்ற சொல்லை அழுத்த முடியவில்லை, -


மாமல்லன் ஏறிட்டுப் பார்த்தான், குலோத்துங்கன் பார்வையில் தீட்சண்யத்தைப் பொருத்தினான்.