பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 45


ஒன்றாக்கி, அந்த ஒன்றில் ஒன்றாக ஒன்றி உருப்பெற்றுக் கொண்டிருந்த கருப்பை உயிர் புத்துணர்ச்சி அருள. அவள் வந்தாள்-மேகலை :


குனிந்த தலையுடன் நிலை குத்திய பார்வையுடனும் கைகளில் முகத்தைச் சுமந்தவாறு மோனத்தவம் இயற்றி, கதைக் கருவுக்காக அகில உலகத்தையுமே தன் பேனாவுக்கு அடியில் போட்டு மிதித்துக் கொண்டு அலட்சியத்துடன் வீற்றிருக்கும் இரண்டாவது பிரம்மா பட்டம் பெற்றவனைப் போலவேதான் அப்பொழுது மாமல்லனும் காணப் பட்டான்.


மெட்டி ஒலி அத்தான்’ என்றது, மேகலை சதங்கை * அன்பரே” என நவின்றது, பட்டாடை ‘பதியே t’ என


உறவு முறை கொண்டாடிற்று,


பல்வகையான பெருமைகளுக்கு மத்தியில் பைத்தியம் தோன்றுமாம் தந்தை வடிவெடுக்கும் பாரதியின் கண்ணனுக்கு !


மேகலையைக் கொண்டவன் தலை நிமிர்ந்தான், குவலயத்தின் பிடியில் அகப்பட்டுச் சுற்றிய அவன், பூகோள உருண்டையைக் கைப்பிடிக்குள் அடக்கிக் கொண்ட அம்மடங்கு தொனிக்கச் சிரித்தான். கோதையைக் கண்டவுடன், நமட்டுச் சிரிப்பு வெடித்தது. போதை போதை தரவில்லை, மயக்கம் அளித்தது. முதற் காதல், முதற் கனவு, முதல் இரவு போன்ற வெவ்வேறு புள்ளிகளை இணைத்து முக்கோணம் வரைந்து, அதற்குள் தன் உடலை உலவ விட்டான், ஆனால், அவன் உள்ளமோ கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது.


  • அத்தான் !”


அ-10