பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 47


மேகலை அவன் அருகில் அமர்ந்து நெற்றியில் பஞ்சு விரல் அமர்த்தித் தொட்டுப் பார்த்தாள். விக்மிப் புடைத் திருந்த தசை நார்கள் தீயாகச் சுட்டுப் பொசுக்கின. பஞ்சும் தீயும் அல்லவா ?- அதனால்தான் அவள் விரல்கள் பஞ்சுக்கு ஒப்பானதோ ?


பஞ்சும் தீயும் அல்லியும் மதியும் ஆயின.


‘எனக்குத் தூக்கம் வருகிறது, நான் போய்ப் படுத்துக் கொள்கிறேன் !’ என்றான் குலோத்துங்கன்.


“இந்நேரம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? ? என்று கேட்டுக்கொண்டே குலோத்துங்கனை நெருங்கினாள் மேகலை அவன் கையில் இருந்த வெள்ளை அட்டையில் வரையப்பட்டிருந்த ஒரு சித்திரத்தை அவள் கூர்மையாக நோக்கினாள். ஆமாம், யார் படத்தை வரைஞ்சுகிட்டிருந் தீங்க ? எங்க சிந்தாமணி படத்தைத் தானே ?’ என்று பேச்சிலே விஷமப் புன்னகையைத் தெளித்துக் கேட்டாள்


“ஊஹகும், சிந்தாமணி படத்தை எனக்குப் போடத் தெரியாது. நெஞ்சில் இருந்தால்தான் நினைவில் நிற்கும். நினைவில் நின்றால்தான் பென்சிலில் இறங்கும் 1’ என்று அசிரத்தையுடன் பதில் வைத்தான் குலோத்துங்கன்,


ஏதோ ஒரு சினிமாவில் காட்டினார்கள் மாபெரும் குற்றம் செய்த கிராதகன் ஒருவனைக் கொதிக்கும் எண்ணெயில் தூக்கிப் போடும்படி எமதர்மராஜன் தண்டனை விதிக்கிறான். அப்படிப்பட்ட தண்டனையை அடைந்திருப்பதைப் போலத் துடித்தான் மாமல்லன். குற்றம் புரிந்தவன்தானே அதற்குரிய தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் :


மேகலையின் சித்திரத்தை மட்டும்தான் உங்களுக்குப் போட்டுப் பழக்கம், ஏன், அப்படித்தானே, மிஸ்டர்