பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


j48


குலோத்துங்கன் ? என்று நறுக்குத் தெறித்தாற்போல அவனிடம் கேட்டு, அவன் கன்னத்தில் முன்னறை பின்னறை யாக நான்கு பரிசளிக்க வேண்டுமென்று அவன் தவித்தான். ஆனால்...! -


‘சரி, சரி. நீங்க போய்த் தூங்குங்க, பாவம் !” என்று விருந்தினருக்கு அறிக்கை சமர்ப்பித்தான் விருந்தளித்தவன்.


இந்திர நீலம் மேஜைச் சுற்றிலும் ஒளியைப் பிரித்துக் கொண்டிருந்தது.


உறக்கத்தில் மாமல்லனுக்கு விருப்பம் கணியவில்லை, அவன் விரும்பிய வகையில் கன்னிமாரா நூல் நிலையத்துப் புத்தகங்கள் சில விருந்தளித்துக் கொண்டிருந்தன. பாவம் அவனுடைய இலக்கிய மனம் கும்பகருணனின் சுவடுகளைப் பின்பற்றியதை நூல்கள் உணரவில்லை ஸிக்மெண்ட் பிராய்ட், வில்ஹம் விண்டட், பிரான்ஸிஸ் கால்ட்டன் போன்ற உளநூல் வல்லுனர்கள் அவனுக்கு எவ்விதமான நிர்ணயத்தையும் .ெ க | டு க் க வி ல் ைல. பின்னர், குலோத்துங்கனின் விசித்திர நிலைக்கு அவனால் எப்படி பரிகாரம் அமைக்க இயலும் ?


குலோத்துங்கனின் முப்பதாண்டுத் தொடர் கதையில் எந்த ஒரு பக்கத்தின் சாரத்தையோ அல்லது, எந்த ஓர் அத்தியாயத்தின் உள்ளுறையையோ மாமல்லன் இதுவரை அறியவில்லை, ஆனால் இப்போது அவன் தெரிந்து கொள்ளத் தவங்கிடந்தான் !


நடுச்சாமத்திற்கு மு க் க ல் மணி முன்னதாக குலோத்துங்கன் படுக்கையில் சாயப்போவதைக் கண்டான் மாமல்லன். உடனே அவனிடம் எழுந்து சென்றான். அங்கிருந்த பாலைக் குறித்துக் காட்டி தேவைப்படும்போது சாப்பிடுங்க ‘ என்று உரைத்தான். அவன் அப்போதே பாலைக் குடித்துவிடுவான் என்று எதிர்பார்த்தான். சித்தன்